Published:Updated:

Doctor Vikatan: இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டபிறகும் ஒமிக்ரான் தொற்று; இனி தடுப்பூசி தேவையில்லையா?

Covid -19 Vaccine
News
Covid -19 Vaccine ( AP Photo )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று கேள்விப்படுகிறோம். தடுப்பூசியைத் தாண்டியும் தொற்று பரவும்போது, இனி தடுப்பூசி தேவைப்படாதா?

- மகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``இந்த விஷயத்தில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்... ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிகவும் குறைவான அறிகுறிகளே காணப்படுகின்றன. இது நமக்கெல்லாம் ஆறுதலான செய்தி. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று பரவுவது உண்மைதான்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்படும் தொற்றானது `பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன்' எனப்படுகிறது. அப்படி ஏற்படும் தொற்று, தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதனால்தான் இரண்டு டோஸ் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு, அதைத் தாண்டி தொற்று ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமல்ல, ஏற்கெனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமானவர்களையும், ஒமிக்ரான் தொற்று தாக்கலாம் என அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப்படுகிறோம். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள், முதலில் கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமான நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

ஏற்கெனவே கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமாகி, இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றிலிருந்து அதிக பாதுகாப்பு இருக்கும் என்பது நிச்சயம். ஒமிக்ரான் தொற்று இதுவரை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதால் அது குறித்து அளவுக்கதிகமாக யோசிப்பதும் பயப்படுவதும் தேவையில்லை. அதே நேரம் அது குறித்த பயமே இல்லாமல் அலட்சியமாக இருக்கவும் வேண்டாம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?