Published:Updated:

பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்; இதுதான் காரணமா?

பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்

ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தவே இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் ரத்தச்சோகையைக் குணப்படுத்துவது கடினமானது.

பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்; இதுதான் காரணமா?

ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தவே இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் ரத்தச்சோகையைக் குணப்படுத்துவது கடினமானது.

Published:Updated:
பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசால் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலியும், சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இந்நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றதால் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மாத்திரைகளின் தரம் சரிபார்க்கப்பட்ட பிறகு பொருத்தமான வழிமுறைகள் வழங்கப்படும். அதன் பிறகு இந்தத் திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அனுப்பிய செய்தி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அவரிடம் பேசினோம்...

பிறந்த குழந்தைகளுக்கும், வளரிளம் பெண்களுக்கும் ரத்தச்சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து மாத்திரைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே நமது நாட்டில் 50 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்தச்சோகை...
ரத்தச்சோகை...

இளம் வயதிலேயே இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடவில்லை என்றால் அந்த பாதிப்பை சரிசெய்வது கடினம். ஃபெரஸ் சல்பேட் எனப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் வாரம் ஒருமுறை பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன. மேலும் குடற்புழு நீக்க மாத்திரையும் பள்ளி மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றன.

இந்த மாத்திரைகள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடம் (TNMSC) இருந்து வாங்கி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகினறன. இரும்புச்சத்து மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது சிறியவர், பெரியவர் யாராக இருப்பினும் அவர்களுக்கு வாந்தி வரலாம். இந்த மாத்திரைகளை உணவு சாப்பிட்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

சத்து மாத்திரைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன்பு தனியாக எந்தப் பரிசோதனையையும் செய்வதில்லை. எல்லா மாத்திரைகளையும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் தரப்பரிசோதனை செய்யும். உளுந்தூர்பேட்டை சம்பவம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது அந்த மாத்திரையின் பேட்சை (Batch) மறுபடியும் தரப்பரிசோதனை செய்வார்கள். அந்த தரப்பரிசோதனை முடிந்த பின் எந்த மாத்திரையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதைத் தெரிவிப்பார்கள்.

இரும்புச்சத்து மாத்திரைகளை உணவு சாப்பிட பிறகுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தவே இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவில்லையென்றால் ரத்தச்சோகையைக் குணப்படுத்துவது கடினமானது.

மாத்திரைகள் 
மாத்திரைகள் 

உளுந்தூர்பேட்டையில் சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால், பள்ளிகளில் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளோம். இருப்பு வைக்கப்பட்டுள்ள மாத்திரைகளைப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் திட்டத்தை ஆரம்பிப்போம்" என்றார்.