Published:Updated:

11 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்; மிரண்டு போன அதிகாரிகள்; பீகாரில் அதிர்ச்சி!

 Vaccine
News
Vaccine ( AP Photo / Mahesh Kumar A )

பிரம்மதேவ் மண்டல் முன்னாள் தபால்துறை ஊழியர். அவரின் கணக்குப்படி அவர் முதல் தடுப்பூசியை 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி செலுத்தியுள்ளார். அதன்பிறகு 2021-ம் ஆண்டு டிசம்பர் வரை பல்வேறு பொது சுகாதார மையங்களில் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

மக்களில் ஒரு பகுதியினர் தடுப்பூசி போடபயந்து கொண்டிருக்கும் நிலையில் பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் 11 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளாராம். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓராய் கிராமத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், இதுவரை 11 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரம்மதேவ் மண்டல் முன்னாள் தபால்துறை ஊழியர். அவரின் கணக்குப்படி அவர் முதல் தடுப்பூசியை 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி செலுத்தியுள்ளார். அதன்பிறகு 2021-ம் ஆண்டு டிசம்பர் வரை பல்வேறு பொது சுகாதார மையங்களில் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

எந்தத் தேதியில், எந்த இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதையும் அவர் டைரியில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 12 -வது முறையாகத் தடுப்பூசி போடுவதற்கு முயற்சி மேற்கொண்டபோது அவரைப் பிடித்துள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்களை ஏமாற்ற பல்வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

``ஒரு மனிதர் எப்படி இத்தனை முறை தடுப்பூசி போட முடியும்? என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என மாதேபுரா மாவட்டத்தின் சிவில் சர்ஜன் அமரேந்திர பிரதாப் கூறியுள்ளார்.