Published:Updated:

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

அவள் பட்டறை

பிரீமியம் ஸ்டோரி

ம் தலையை அலங்கரிக்கும் விலையில்லா கிரீடம், கேசம். அத்தகைய கேசத்தின் பராமரிப்புக் குறித்து பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள் பல. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘இளநரை, பொடுகு, முடி உதிர்வு... கேசப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!’ என்ற கட்டணமில்லா வெபினாரை நடத்தியது அவள் விகடன். வழங்கியவர், கேசப் பராமரிப்பு ஆலோசகர் தலத் சலிம்.

தலத் சலிம், கடந்த 20 ஆண்டுகளாகக் கேசம் மற்றும் சருமப் பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னையில் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கிவருகிறார்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

``முடி உதிர்வுக்கு மரபணு, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் பிரச்னைகள் எனப் பல காரணங்கள் உள்ளன’’ என்று ஆரம்பித்த தலத் சலீம், அவற்றை பற்றிய விளக்கமும், அவற்றுக்கான தீர்வுகளும் சொன்னதை கவனமாகக் கேட்டுக்கொண்டதும் குறிப்பும் எடுத்துக்கொண்டனர் வெபினாரில் கலந்துகொண்ட நம் வாசகிகள்.

பின்னர் தங்கள் கேசப் பிரச்னைகள் குறித்த சந்தேகங்களை அவர்கள் கேட்க, விளக்கமும் தீர்வும் அளித்தார் தலத் சலீம். வெபினாரின் ஹைலைட்ஸ் இங்கே!

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!
கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

கேசத்துக்குத் தேங்காய்ப்பால்!

``ஆரோக்கியமான கேசத்துக்கு அடிக்கடி தலைகுளிக்க வேண்டும். ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை முடியை நுனியில் ட்ரிம் செய்யலாம். முடி உதிர்தலைத் தடுக்க தேங்காய்ப்பாலை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலசலாம். அரிசி கழுவிய தண்ணீராலும் தலையை அலச, கேசத்துக்கு ஊட்டம் கிடைக்கும். பெண்களுக்கு அதிக முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைப் பிரச்னைக்குத் தீர்வாக, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமாகச் சூடுபடுத்தி, அதில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பவுடர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி, தலையில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

குளிக்கலாம். நல்ல தண்ணீர் அவசியம். அதிக பிஹெச் அளவு இல்லாத மிதமான ஹெர்பல் ஷாம்பூ உபயோகிக்க வேண்டும். எந்த அளவுக்கு தலை சுத்தமாக உள்ளதோ, அந்த அளவுக்கு முடி நன்றாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

கேசமும் வெங்காயமும்!

வெங்காயத்தில் சல்ஃபர் நிறைந்திருப்பதால் பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு தரும். வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஜெர்மேனியம் நிறைந்துள்ளன. வெங்காயம், பூண்டு, நெல்லிக்காய், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் ஆக்கி தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். இது பொடுகு, அரிப்பை மட்டுமன்றி தலையில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் தொற்றையும் நீக்கிவிடும்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

கேசத்துக்கு சத்தளிக்கும் உணவுகள்!

கேசம் புரதத்தால் ஆனது. கேச ஆரோக்கியத்துக்குப் புரதம் நிறைந்த உணவுகள் அவசியம். கீரை வகைகளில் பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி, சி, இ, இரும்புச்சத்து, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. பாதாம், வால்நட் ஆகியவற்றுடன் வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருள்களும் கேச ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

பொடுகுத் தொல்லைக்கு வீட்டு மருந்து!

வாரத்துக்கு இருமுறை தலையில் தயிர் தடவி, பின்னர் ஆப்பிள் சிடார் வினிகர் தடவி, ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்திக் குளிக்கலாம்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

இளநரை...

வைட்டமின் பி12 குறைபாட்டால் இளநரை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, வைட்டமின் பி12 சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். கல்லீரலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. கறிவேப்பிலை, நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி இலை, செம்பருத்திப்பூ, சின்ன வெங்காயம் இவற்றை சாறு எடுத்து எண்ணெய் காய்ச்சிப் பயன்படுத்தலாம். வெள்ளையான முடியை மீண்டும் கறுப்பாக்குவது கடினம். எனவே, இளநரை ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது’’ என்று இன்னும் பல விஷயங்களை விளக்கியவரிடம், கேள்வி - பதில் பகுதியில் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர் நம் வாசகிகள். அவற்றிலிருந்து சில கேள்வி - பதில்கள் இங்கே...

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

காபி, டீ குடிப்பதால் முடி உதிர்வு ஏற்படுமா...

நாள் ஒன்றுக்கு ஒன்று, இரண்டு கப் குடிக்கலாம். அதிகமாகக் குடித்தால், உச்சந்தலைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். டீ, காபி குடிப்பதற்கும் முடி கொட்டுவதற்கும் நேரடி சம்பந்தமில்லை.

பேன் தொல்லைக்கு...

வேப்பெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூ தேய்த்துக் குளிக்கலாம்.

கேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்!

கர்ப்பகாலத்திலும் குழந்தை பிறந்த பின்னரும் கேசப் பராமரிப்பு....

கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகள், சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் கேச வளர்ச்சி நன்றாக இருக்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொண்ட இரும்பு, கால்சியம், மல்டி வைட்டமின் போன்ற சத்து மாத்திரைகளைப் பிரசவத்துக்குப் பின் நிறுத்துவதாலும் கேசத்துக்கு சத்துக் குறைவு ஏற்படும். எனவே, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை சத்து மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கெண்ணெய், ஆல்மண்ட் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து உபயோகிக்கலாம். நல்ல தூக்கம் அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு