Published:Updated:

ஹேண்ட் டிரையர் ஏற்படுத்தும் பாதிப்பு - 13 வயது சிறுமியின் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

ஜெனி ஃப்ரீடா

கடந்த சில ஆண்டுகளாக தான் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள், நூலகங்கள், மால்கள், உணவகங்களில் உள்ளிட்டவற்றில் இருக்கும் பொதுக்கழிவறைகளில் எல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டார் அச்சிறுமி!

ஹேண்ட் டிரையர்
ஹேண்ட் டிரையர் ( Pixabay )

ம்மை நேரடியாகப் பாதிக்கும் நிகழ்வுகளில் இருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அப்படி ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட அனுபவம், அர்த்தமுள்ள ஓர் ஆய்வுக்கு உதவியுள்ளது.

சிறுமி நோரா கீகன்
சிறுமி நோரா கீகன்
Newyork times

அலுவலகம், ஹோட்டல்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் இருக்கும் கழிவறைகளில், ஹேண்ட் டிரையர் பொருத்துவது வழக்கமாகிவிட்டது. அந்த டிரையரில் இருந்து வெளிவரும் சத்தம், கேட்கும் திறனையே பாதித்துவிடும் என்று கண்டறிந்துள்ளார் கனடாவைச் சேர்ந்த சிறுமி நோரா கீகன். இவருக்கு தற்போது 13 வயதுதான் ஆகிறது.

இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சமயத்தில்தான் அவருக்கு இந்த ஐடியா தோன்றியது.

கேட்கும் திறன்
கேட்கும் திறன்

"கழிவறைகளில் உள்ள ஹேண்ட் டிரையர், எனக்கும் என்னைப் போன்ற சிறுவர்களின் காதுகளையும் பாதிக்கிறது என்பதை உணர்ந்தேன். பல சிறுவர்கள் ஹேண்ட் டிரையர்கள் அருகில் செல்லும்போது, காதுகளை மூடிக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என் பெற்றோரிடமும் இதுபற்றி அடிக்கடி கூறிவந்தேன்.அதன்பிறகுதான், ஹேண்ட் டிரையர்கள் செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று ஆய்வுசெய்யத் தொடங்கினேன்" என்கிறார் நோரா கீகன்.

இதற்காக, கடந்த ஆண்டுகளில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள், நூலகங்கள், மால்கள், உணவகங்களில் இருக்கும் பொதுக் கழிவறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். தன் குடும்பத்தாரின் உதவியுடன், ஹேண்ட் டிரையரில் இருந்து வெளிவரும் உஷ்ணமான காற்றில் இருக்கும் சத்தத்தின் அளவை பல்வேறு கோணங்களில் கணக்கிட்டார்.

காது
காது

ஆய்வின் முடிவில், ஹேண்ட் டிரையர்கள் பொதுவாகவே ஆண்கள், பெண்களுக்கான உயரத்தின் அடிப்படையிலே பொருத்தப்படுகின்றன. மேலும் ஹேண்ட் டிரையர்களில் இருந்து வெளியாகும் சத்தத்தின் டெசிபல்கள் அடிப்படையில் அவை காதுகளில் வலி, காயம், கேட்கும் திறனை இழத்தல் எனப்பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளார். இந்தச் சிறுமியின் ஆய்வு கனடா குழந்தைகள் நல நிபுணர்கள் சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.