Published:Updated:

தாய்மார்களுக்கு வெற்றிலை... மூச்சிரைப்புக்கு கற்பூர வாழை...

தாரணி
பிரீமியம் ஸ்டோரி
தாரணி

ஊட்டச்சத்து ஆலோசகர் தாரணியின் ஆரோக்கிய அனுபவங்கள்!

தாய்மார்களுக்கு வெற்றிலை... மூச்சிரைப்புக்கு கற்பூர வாழை...

ஊட்டச்சத்து ஆலோசகர் தாரணியின் ஆரோக்கிய அனுபவங்கள்!

Published:Updated:
தாரணி
பிரீமியம் ஸ்டோரி
தாரணி

படம்: ச.பரத்வாஜ்

சென்னையைச் சேர்ந்த பிரபல ஊட்டச் சத்து ஆலோசகர் தாரணி கிருஷ்ணன், பரபரப்பு மிகுந்த மயிலாப்பூர், சி.ஐ.டி காலனியிலுள்ள தன் வீட்டில் எளிமையான தோட்டம் அமைத்திருக்கிறார். முக்கனிகளான மா, பலா, வாழையுடன் மூலிகைகள் பலவும் நிறைந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் பாத்திரங்களைத் துலக்குவதற்கான இடத்தை அமைத்து, கழிவுநீரை மறுசுழற்சி செய்து முறையாகப் பயன்படுத்துகிறார். தோட்ட ஆர்வத்தைச் சிலாகித்தபடியே, பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்தார் தாரணி.

“மண்புழு விஞ்ஞானியான சுல்தான் அகமது இஸ்மாயில், எங்க குடும்ப நண்பர். அவரோட ஆலோசனையின்படி, நீர் சேமிப்பு மற்றும் தோட்டப் பராமரிப்புக்கான ஏற்பாடு களுடன் 2000-ல் இந்த வீட்டைக் கட்டினோம். சமையல் வேலைகள் முடிஞ்சதும், பாத்திரங் களைத் தோட்டத்து ஏரியாவுக்குக் கொண்டு வந்துதான் துலக்குவோம். கடந்த 22 வருஷங் களா இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கி றோம். ரசாயன கலப்பில்லாத சோப்புடன், பாத்திரம் துலக்க தேங்காய் நார்தான் பயன் படுத்துவோம். பாத்திரம் கழுவப் பயன்படுத்திய நீர், நேரடியா சுத்திகரிப்பு தொட்டிக்குப் போகும். அதுல சின்னதும் பெரிசுமா மூணு அடுக்குகளா ஜல்லிக்கற்களை நிரப்பியிருக் கோம். அந்தத் தொட்டியில நிறைய தடுப்புகள் அமைச்சிருக்கோம். இதனால, மெதுவா கடந்துபோகிறப்போ கசடுகள் சேகரமாகிடும். பின்னர், அந்த நீரானது கல் வாழை செடிகளைக் கடந்து போகும்.

தாய்மார்களுக்கு வெற்றிலை... மூச்சிரைப்புக்கு கற்பூர வாழை...

விஷத்தன்மையையும் அழுக்குகளையும் ஈர்க்கும் தன்மை கொண்ட அந்தச் செடிகள், நீரை மறு பயன்பாட்டுக்கு உகந்ததா மாத்திடும். அந்த நீரை நேரடியா செடிகளுக்கு அனுப்புற தோடு, மழைநீர் தொட்டியிலயும் சேகரிக் கிறோம். இதே முறையில பாத்ரூம் கழிவுநீரையும் சுத்திகரிச்சு நிலத்தடிக்கு அனுப்புறோம்” என்று தோட்டத் தைச் சுற்றிக் காட்டியபடியே சொன்ன தாரணி, வெற்றிலையின் அருமை களை அடுக்கினார்.

“பத்து வருஷங்களுக்கு முன்பு ரெண்டு வெற்றிலைச் செடிகளைத்தான் வெச்சோம். அது கிளைகள் பரப்பி பந்தல் மாதிரி வளர்ந் திடுச்சு. சாப்பிடவும் பூஜைக்கும் பயன்படுத்துற தோடு, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சம்பிரதாயமா வெற்றிலைகளைக் கொடுத் தனுப்புவோம்.

நம் வீடுகள்ல அவசியமா வளர்க்க வேண்டிய மூலிகைகள்ல வெற்றிலை முக்கியமானது. குழந்தை பெற்ற தாய்மார்கள், தொடர்ச்சியா 40 நாள்களுக்கு உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரத்துல தலா 10 வெற்றிலையை, ஒன்றிரண்டு பாக்குடன் லேசா சுண்ணாம்பு சேர்த்து மெல்லுறது ரொம்பவே நல்லது.

இப்படி தினமும் ரெண்டு வேளைக்குச் சாப்பிடலாம். இதனால, கால்சியம் சத்து கூடும், தாய்மார்களுக்கு செரிமான பாதிப்புகளும் ஏற்படாது. இதுமூலமா தாய்ப்பால் வழியே குழந்தைக்கும் நன்மை கிடைக்கும். வயித்துவலியில சிரமப்படுற குழந்தைகளுக்கு, சில வெற்றிலைகளைத் தோசைக்கல்லுல லேசா சூடாக்கி, தொப்புள்ல விளக்கெண்ணெய் தடவி பற்றுபோட்டு விட்டா விரைவா பலன் கிடைக்கும்” என்பவரின் தோட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பயன்தருகின்றன.

“வாழை ரகங்கள்ல மூச்சிரைப்பு பாதிப்பு உள்ளவங்களுக்கு கற்பூர வாழைதான் சாப்பிட உகந்தது. என் அம்மா மற்றும் மாமியாருக்கு இந்தப் பிரச்னை இருந்ததால கற்பூர வாழையை வளர்த்தோம். பல வருஷங்களுக்கு முன்பு வெச்ச மரங்கள்லேருந்து பக்க கிளைகள் மூலமா புதுப்புது மரங்கள் வளருது. ரெண்டு தென்னை மரங்கள் இருக்கு. மட்டை உரிக்காத தேங்காய்களைப் பத்திரப்படுத்தி வெச்சு, தேவைக்கேற்ப தேங்காய் எடுத்துப் பயன் படுத்திக்கிறதோடு, எண்ணெயும் ஆட்டிப் போம். பலா மரம் ஒண்ணு இருக்கு. ருமானி ரக மாமரம் இருக்கு. அதுல ஊறுகாய் தயாரிப் போம்.

தாய்மார்களுக்கு வெற்றிலை... மூச்சிரைப்புக்கு கற்பூர வாழை...
தாய்மார்களுக்கு வெற்றிலை... மூச்சிரைப்புக்கு கற்பூர வாழை...

வேப்பம்பூவைக் காயவெச்சு அரைச்சு சேமிச்சு வெச்சுப்போம். அதை, சாதத்துல நெய்யுடன் சேர்த்துச் சாப்பிடுறது, கஷாயம் பண்றது, ரசத்துல சேர்க்கிறதுனு பலவிதத்து லயும் பயன்படுத்துறோம். பப்பாளி, கொய்யா, கறிவேப்பிலை, குப்பைமேனி, ஓமவள்ளினு முடிஞ்ச அளவுக்கு மருத்துவ குணமுள்ள தாவரங்களை வளர்க்கிறோம்” என்கிற தாரணி, பால்கனி மற்றும் மொட்டைமாடியில் பலவிதமான பூச்செடிகளுடன், துளசி, நந்தியாவட்டை, கற்றாழை உள்ளிட்ட பல விதமான மூலிகைகளையும் வளர்க்கிறார். சாணத்துடன் காய்ந்த இலைத்தழைகளைச் சேர்த்து மண்புழு உரம் தயாரித்து செடி களுக்குப் பயன்படுத்துகிறார்.

“சாப்பிடுற உணவுகளைப்போல, நாம அதிக நேரம் பார்க்கிற நல்ல காட்சிகளும் மனசை ஆரோக்கியமா வைக்கும்னு சொல் வாங்க. அந்த வகையில தோட்டத்திலேருந்து கிடைக்கிற உணவுகளை முறையா பயன் படுத்துறதோடு, இதுக்கான பராமரிப்பு மூலமா புத்துணர்வையும் பெறுகிறோம்” என்று தாவரங்களுடனான பசுமையான பந்தத்தை எடுத்துரைத்தார் தாரணி.