Published:Updated:

ஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்!

health

கருவுற்ற நாள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் நொடிவரை கர்ப்பிணிகளுக்கு சிரமமான காலம்.

ஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்!

கருவுற்ற நாள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் நொடிவரை கர்ப்பிணிகளுக்கு சிரமமான காலம்.

Published:Updated:
health

ல மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, கர்ப்பப்பைச் சிதைவு. பரவலாக அறியப்படாத இந்தப் பிரச்னை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் பிரதீபா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 ஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்!

கர்ப்பப்பைச் சிதைவு

பேறுகால வலியின்போதோ, குழந்தைப் பிறப்பு நிகழும்போதோ பெண்ணுக்குக் கர்ப்பப்பையின் சுவரில் (Uterine Wall) முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படும் கிழிசலே கர்ப்பப்பைச் சிதைவு (Uterine Rupture). இது தாய், சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குத் தீவிரமான பிரச்னை. ஆனால், இன்றைக்கு மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களில் 0.8 சதவிகிதம் பேருக்கு கர்ப்பப்பைச் சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

காரணங்கள்

  • ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையில் ஏற்படும் வடு, முந்தைய சிசேரியன் அறுவை சிகிச்சை, கர்ப்பப்பையில் தசைக்கட்டியை நீக்குவது (Myomectomy), ஃபோர்செப்ஸ் டெலிவரி போன்றவை கர்ப்பப்பைச் சிதைவுக்கான சில காரணங்கள்.

  • வயிற்றிலிருக்கும் குழந்தையின் நிலை மாற்றம், அதனால் ஏற்படும் சிக்கல்கள், முந்தைய அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்ட வடுக்கள் உள்ள கர்ப்பப்பையில் அதிகப்படியான அழுத்தத்துடன் நஞ்சுக்கொடியைக் கையால் நீக்குதல், அதீதமான கர்ப்பப்பை சுருக்கம் மற்றும் அதற்குத் தகுந்தாற்போல் கர்ப்பப்பைவாய் விரிவாக்கம் இல்லாமை இவையெல்லாம் பேறுகால வலியின்போது ஏற்படும் கர்ப்பப்பைச் சிதைவுக்கான காரணங்கள்.

  • கர்ப்பப்பையின் மேல் படர்ந்திருக்கும் பெரிட்டோனியம்‌‌ (Peritoneum) என்ற சவ்வின் பிளவைப் (Disruption) பொறுத்து இந்தப் பிரச்னை, முழுமையான அல்லது முழுமையற்ற கர்ப்பப்பைச் சிதைவு என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு கர்ப்பப்பையில் பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள்கூடக் காரணங்களாக இருக்கலாம்.

  • குறிப்பிட்ட நாளுக்குப் பிறகும் பிரசவவலி ஏற்படாமலிருக்கும் பெண்களுக்கு `ஆக்ஸிடோசின்’ (Oxytocin) என்ற மருந்து கொடுக்கப்படும். இது, கர்ப்பப்பையின் தசைகளை அதிக அளவில் சுருங்கச் செய்து, குழந்தையை வெளியே எடுக்க உதவக்கூடியது. இது அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்போது, கர்ப்பப்பைச் சிதைவு ஏற்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 ஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்!

அறிகுறிகள்

பிரசவகாலத்தின்போது கர்ப்பப்பைச் சிதைவு ஏற்பட்டதன் அறிகுறிகளாக, தாய்க்கு இதயத்துடிப்பு குறைவது, கடுமையான வயிற்றுவலியுடன்கூடிய ரத்தப்போக்கு, கர்ப்பப்பையின் முந்தைய வடுக்களின் மீது திடீரென ஏற்படும் வலி, வீக்கம், கர்ப்பப்பை சுருக்கம் குறைவது அல்லது வீரியம் அற்றுப்போவது, சிசுவின் இதயத்துடிப்பைக் கண்டறிய முடியாமல் போவது ஆகியவற்றைச் சொல்லலாம்.

பரிசோதனைகள், சிகிச்சைகள்!

அறிகுறிகள் தெரிந்தவுடன், அல்ட்ரா சவுண்டு பரிசோதனை மூலம் கர்ப்பப்பைச் சிதைவை உறுதிப்படுத்த வேண்டும். உடனே அடுத்தகட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சிதைவு கர்ப்பப்பைக்கும், பெரிட்டோனியம் (Peritoneum) என்ற வயிற்றின் சவ்வுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி வயிற்றுக்குள் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கிவிடும். அது, தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும். எனவே, உடனடியாகத் தாயைக் காப்பாற்ற முயல வேண்டும். ரத்தப்போக்கையும் அதனால் ஏற்படும் நீர் இழப்பையும் சரிசெய்த பின்னர், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். இது போன்ற சிக்கல்களால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். குழந்தையை வெளியே எடுத்த பிறகு கர்ப்பப்பையை முழுமையாக நீக்க வேண்டும். தாய், சேய் மரணங்களை அதிகம் ஏற்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றான கர்ப்பப்பைச் சிதைவு ஏற்பட்டவர்களில், 15.8 சதவிகிதத் தாய்மார்களைக் காப்பாற்ற முடிவதில்லை என்பதே யதார்த்தம்.

வருமுன் காக்க!

பிரசவத்தின்போது ஏற்படும் இந்தக் கொடிய பிரச்னையைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் கர்ப்பகால சோதனையை மருத்துவர் அறிவுறுத்தலின்படி சரிவரச் செய்து வர வேண்டியது அவசியம். முந்தைய சிசேரியன் பிரசவம், பிறவியிலேயே கர்ப்பப்பையில் குறைபாடுகள் போன்ற பிரச்னைகளுள்ள பெண்கள், அதிக கவனமாக இருக்க வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism