Published:Updated:

`கேள்விகளுக்கு விடை.. மருத்துவர்கள் உரை.. புத்தக வெளியீடு!’- 'நலந்தானா’ கருத்தரங்கு ஹைலைட்ஸ்

மருத்துவர் கு.சிவராமன் நடத்துகிற ஆரோக்யா சித்த மருத்துவமனையும் விகடனும் இணைந்து நடத்தும் 'நலந்தானா' நல்வாழ்வுக் கருத்தரங்கம் இன்று காலையில் தொடங்கியது.

'நலந்தானா’ கருத்தரங்கு
'நலந்தானா’ கருத்தரங்கு

சென்னை கோட்டூர்புரம் அண்ணா மைய நூலகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெறுகிற இந்த நிகழ்வில் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களும், மருத்துவ மாணவர்களும் விகடன் வாசகர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டுள்ளனர்.

'நலந்தானா’ கருத்தரங்கு
'நலந்தானா’ கருத்தரங்கு

ஆரோக்ய மருத்துவமனையின் 25 -வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாட்டமாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.

மருத்துவம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் சிவராமன் உள்ளிட்ட மருத்துவர்கள் நேரடியாக விளக்கம் தருகின்றனர். மருத்துவத்தில் எல்லா வகைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் ஒருநாள் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. அரங்கின் வெளியே சிறுதானியக் கண்காட்சியும், மருத்துவம் தொடர்பான புத்தக விற்பனையும் நடைபெற்று வருகிறது.

'நலந்தானா’ கருத்தரங்கு
'நலந்தானா’ கருத்தரங்கு

'உடல்நலம், உள்ளநலம், உணவுநலம், சமூகநலம் செதுக்கும் பணியில்..' என்ற டேக் லைனோடு தொடங்கியிருக்கிற இந்த இனிய நிகழ்வு இரவு 8 மணிவரையிலும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலும், கு.சிவராமன் எழுதி ஆனந்தவிகடன் தொடராக வெளிவந்த 'இன்னா நாற்பது இனியவை நாற்பது' கட்டுரைகள் புத்தகமாக இன்றைய மாலை நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.