Published:Updated:

நலந்தானா நல்வாழ்வுக் கருத்தரங்கு! - நீங்களும் கலந்துகொள்ள விருப்பமா? #Video

விகடன் வாசகர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு, தீர்வும் பெறலாம்.

மருத்துவர் சிவராமன்
மருத்துவர் சிவராமன்

ஒரு குடையின் கீழ் ஆங்கில மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஒன்றிணைந்து நோயாளிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் காலம் நெருங்கிவிட்டது. இதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். தன்னுடைய ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் வெள்ளி விழா ஆண்டில் இந்த நல் முயற்சியைத் தொடங்கவிருக்கிறார். நல்லவையுடன் விருப்பமுடன் கைகோக்கும் விகடன், மீடியா பார்ட்னராக இணையவிருக்கிறது.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

டாக்டர் சிவராமனுடன் இதயநோய் மருத்துவர் சுந்தர் (காவேரி மருத்துவமனை), சர்க்கரைநோய் மருத்துவர் ஷண்முகம் (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்), புற்றுநோய் மருத்துவர் ஜெபசிங் (மதுரை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்), நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் (சிம்ஸ் செல்லம் மருத்துவமனை, சேலம்), ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் (தெரிசனங்கோப்பு மகாதேவன் வைத்தியசாலையின் தலைமை மருத்துவர்), இயற்கை யோகா மருத்துவர் சரண்யன் (கோவை ஆர்.கே. நேச்சர் க்யூர் தலைமை மருத்துவர்), சமூக சித்த மருத்துவர் பி.மைக்கேல் ஜெயராஜ் (தலைவர், உலக தமிழ் மருத்துவக் கழகம் மற்றும் ஆசிரியர்- கற்ப அவிழ்தம்), திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெகன்னாதன், மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியக இயக்குநர் சித்த மருத்துவர் சத்யராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிற இந்த விழாவில், `சர்க்கரை முதல் புற்றுநோய்வரை', `நோய் தடுக்க நோய் நீக்கப் பாதுகாப்பும் பரிந்துரைகளும்', `இன்றைய சித்தம் முதல் இன்றைய நவீனம் வரை', 'ஆயுர்வேதம் முதல் இயற்கை மருத்துவம்வரை' ஆகிய தலைப்புகளில் மருத்துவர்கள் பேசவிருக்கிறார்கள். சிறப்பு வாய்ப்பாக விழாவில் கலந்துகொள்கிற விகடன் வாசகர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு, தீர்வும் பெறலாம்.

விழாவில், மரபு சிறுதானியங்கள் முதல் பாரம்பர்ய நெல் ரகங்கள் வரை, `உங்களுக்கான நல் உணவுகள் எவை' என்று தெரிந்துகொள்வதற்கான உணவுக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. தவிர, மூலிகைகளின் அணிவரிசை, சித்த மருத்துவத் தொன்மையான நூல்களின் கண்காட்சி, சித்த ஆயுர்வேத மருந்துகளின் கண்காட்சி ஆகியவையும் உண்டு.

விழாவின் ஹைலைட்டாக மருத்துவர் சிவராமன் ஆனந்த விகடனில் எழுதிய `இன்னா நாற்பது இனியவை நாற்பது' தொடர் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கிவைக்க, தலைமை விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதியரசர் இராம.சுப்ரமணியன், சிறப்பு விருந்தினராக சொல்வேந்தர் சுகி சிவம், நூல் வெளியிட்டு சிறப்புரை செய்ய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வாழ்த்துரை சொல்ல இசைக்கவி ரமணனும் கலந்துகொள்கின்றனர்.

சுகிசிவம்
சுகிசிவம்

விழா நடைபெறுகிற நாள்: டிசம்பர் 29 - 2019

நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

இடம்: அண்ணா நூற்றாண்டு மைய நூலகம், சென்னை

விகடன் வாசகர்களுக்கு அனுமதி இலவசம். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் பதிவுசெய்வோருக்கே முன்னுரிமை!

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.