Published:Updated:

`தொண்டை வலி; தொடர் சிகிச்சை!' - வெளிநாட்டிலிருந்து அரியலூருக்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பு?

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள்

வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 பேரில், 32 பேருக்கு 28 நாள்களுக்கு மருத்துவக் குழுவினரால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

"கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா
கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலி, அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கரும்பு வெட்டும் வேலைக்காக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்திற்கு 67 பேர் கடந்த 20-ம் தேதியிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் தகவல் அளித்ததன் பெயரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர். இதில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும் மற்றவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால், இருவருக்கு கடுமையான தொண்டை வலி இருப்பதால் அவர்களைத் தீவிர கண்காணிப்பில் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள்

அதேபோல், அரியலூர் மாவட்டத்திலிருந்து வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 பேரில், 32 பேருக்கு 28 நாள்களுக்கு மருத்துவக் குழுவினரால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா

மீதமுள்ள 246 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையிலுள்ள மருத்துவக்குழுவினரால் தினந்தோறும் தொடர்பு கொள்ளப்பட்டு, கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் சளி, காய்ச்சல் மற்றும் இதர உடல் உபாதைகள் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து, வீடுகளில் தனிமைப்படுத்திய நிலையில் உள்ள அவர்களின் வீட்டு முகப்பு பகுதிகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு