Published:Updated:

ஹெல்த்: நீரும் உற்சாக பானமே!

water

மரபுரீதியாக உடல் பருமன் ஏற்பட்டவர்களைவிட ஆரோக்கியமற்ற அல்லது தவறான உணவுப் பழக்கங்களால் உடல் பருமனுக்கு உள்ளானவர்களே அதிகம்.

ஹெல்த்: நீரும் உற்சாக பானமே!

மரபுரீதியாக உடல் பருமன் ஏற்பட்டவர்களைவிட ஆரோக்கியமற்ற அல்லது தவறான உணவுப் பழக்கங்களால் உடல் பருமனுக்கு உள்ளானவர்களே அதிகம்.

Published:Updated:
water

‘தவறான உணவுமுறை என்பது திரவ உணவுகளுக்கும் பொருந்தும். சர்க்கரைச்சத்து, கலோரி நிறைந்த திரவ உணவுகளான ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ், சோடா, செயற்கைக் குளிர்பானங்கள், பழச்சாறுகள், தாதுச்சத்து நீக்கப்பட்ட குடிநீர் போன்றவைதான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பவை’ என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே, திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதற்கும் அளவுகோல் உண்டு என்பதை மறக்கக் கூடாது. என்ன அளவுகோல்... எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்... பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் ராஜேஷ்வரி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஹெல்த்: நீரும் உற்சாக பானமே!
  • கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது. விரும்பினால், வீட்டிலேயே மிகக் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துத் தயாரித்து அருந்தலாம். பழத்தின் நன்மை முழுமையாகக் கிடைக்க அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

  • `தாதுச்சத்து நீக்கப்பட்ட நீர்’, `அல்கலைன் நீர்’ (Alkaline Water), `வைட்டமின் நிறைந்த நீர்’ போன்ற பெயர்களில், ‘ஆரோக்கியமான நீர்’ என்ற போர்வையில் பல வகைகள் விற்கப்படுகின்றன. கொதிக்கவைத்து, வடிகட்டப்பட்ட நீரைவிட ஆரோக்கியமானது வேறு இல்லை. சீரகத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெல்த்: நீரும் உற்சாக பானமே!
  • செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதால், கார்பனேட்டடு பானங்களை, குழந்தை முதல் பெரியவர்வரை அனைவருமே தவிர்க்க வேண்டும். மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • திரவ உணவுகளில் இளநீர், மோர், வீட்டிலேயே தயாரிக்கும் காய்கறி சூப் ஆகியவை சிறந்தவை.

  • கொதிக்கவைத்த நீரில் வெள்ளரிக்காய், புதினா சேர்த்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் அருந்தினால் உடல் வறட்சி தடுக்கப்படும்.

  • சில பெற்றோர் குளிரூட்டப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அவற்றுக்கு பதில் வீட்டிலேயே பழச்சாறுகள் தயாரித்துக் கொடுப்பது ஆரோக்கியம் காக்கும். உணவுக்கு முன்னர் குழந்தைக்கு பழச்சாறு கொடுக்க வேண்டாம். அது அவர்களின் திட உணவின் அளவைக் குறைத்துவிடும். நீரைவிடச் சிறந்த உற்சாக பானம் எதுவுமில்லை. அதை அதிகம் அருந்த குழந்தைகளைப் பழக்கப்படுத்தினால் போதும்.

  • பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், ‘ஃப்ளேவர்டு’ குளிர்பானங்கள் மூலமாகத் தங்களது பசியைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதுதான் உடல் பருமனுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, திட உணவுகளைத் தட்டிக்கழிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism