Published:Updated:

“வயசுங்கிறது வெறும் நம்பர்தான்...” ஜெயக்குமார் சொல்லும் சுறுசுறுப்பு டெக்னிக்..!

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

ஹெல்த் இஸ் வெல்த்

''நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மெனில் சத்தான உணவுகளைத் தேவையான அளவில் உட்கொள்ள வேண்டும். வசதி படைத்தவர்கள்தான் நல்ல உணவுகளையும் பழங்களையும் சாப்பிட முடி யும் என்று தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். கொய்யாப் பழத்திலும், நெல்லிக் காயிலும் அபரிமிதமான சத்துக்கள் இருக்கின்றன. அவை பெரிய விலை கிடையாது. பொதுவாக, அந்தந்த சீஸனில் விளையும் பழங்கள் குறைவான விலையில் கிடைக்கும். எனவே, எல்லோரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியும்” - எதார்த்தமாகப் பேசுகிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

60 வயதைக் கடந்தாலும் சுறுசுறுப்பிலும் உற்சாகத்திலும் இளைஞர்களுக்கு சவால் விடக்கூடியவர் முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார். அவரது ஃபிட்னஸ் பற்றிக் கேட்டதும், `இது நமக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட்’ என ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார்.

“நான் ஒண்ணாவதிலிருந்து ஐந்தாவது வரை டான் பாஸ்கோ ஸ்கூலில் படிச்சேன். எங்க வீட்ல இருந்து ஸ்கூல் 5 கிலோ மீட்டர் தூரம்ங்கிறதால ஸ்கூல் பஸ்ல போவேன். 6-வதிலிருந்து 12 வரை நான் படிச்ச சங்கர லிங்க நாடார் பள்ளி எங்க வீட்ல இருந்து 2 கிலோ மீட்டர் தூரம்தான்.

காலையில எழுந்து கில்லி, கோலி, பம்பரம்னு விளையாடிட்டு அதன்பிறகு, கிளம்பி ஸ்கூலுக்கு ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போவேன். மதியம் சாப்பிடறதுக்கும் வீட்டுக்கு வந்துட்டு போவேன். அதேபோல, சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டுத் திரும்பவும் டியூஷன் போவேன். மொத்தத்துல தினமும் ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் நடந்துருவேன். நண்பர் களோட நடக்குறதால அது பெருசா தெரியாது. இன்னைக்கு என் கெண்டைக்கால் சதை வலுவா இருக்கிறதுக்கு காரணம், அப்ப நடந்த அந்த நடைதான். இன்னிக்கும் நான் நடக்கிற வேகத்துக்கு யாராலயும் ஈடுகொடுத்து நடக்க முடியாது. வேணும்னா நடந்து பாக்குறீங் களா?” ஜாலியாக சவால்விட்டு, தொடர்கிறார்...

‘‘அடுத்து, நீச்சல்... அது மாதிரியான ஒரு பெஸ்ட் எக்சர்சைஸ் வேறெதுவும் கிடையாது. உடல்ல இருக்கிற எல்லா ஆர்கன்களும் வேலை செய்யுற ஒரே எக்சர்சைஸ் நீச்சல்தான். நானெல்லாம் கடல்ல நீச்சல் பழகியவன். கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள்ள போயிருவோம். அரை பனைமர ஆழம் இருக்கும். அங்கிருந்து காசை கொஞ்ச தூரத்துல போட்ருவோம். அந்தக் காசை எவன் தேடி எடுக்கிறானோ, அவன்தான் ஹீரோ. அந்த விளையாட்டுல ஜெயிக்கிறதுக்காக பல மணி நேரம் உள் நீச்சல்லயே காசைத் தேடுவோம். அதே போல, சைக்கிளிங்கும் அதிகமா பண்ணுவேன். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது பல `அத்லெட்டிக்’ போட்டிகள்லயும் நான்தான் ஃபர்ஸ்ட். விளையாட்டுகள்ல எனக்கு ஈடுபாடு அதிகம். ஒவ்வொரு வருஷமும் நீச்சல் போட்டியில நான்தான் சாம்பியன். என்னுடைய ஆரோக்கியத்துக்கு ஆரம்பக் கால வாழ்க்கை முறைதான் காரணம். ஆனா, உணவைப் பத்தி சின்ன வயசுல நான் பெருசா சிந்திக்கல.

“வயசுங்கிறது வெறும் நம்பர்தான்...” ஜெயக்குமார் சொல்லும் சுறுசுறுப்பு டெக்னிக்..!

எனக்கு 22 வயசு இருக்கும்போது நண்பர்களோட சிங்கப்பூருக்கு சுற்றுலா போனேன். சிங்கப்பூர்ல உள்ள என் நண்பரோட வீட்லதான் தங்கியிருந்தோம். அவங்க வீட்ல குட்டி பசங்க இருந்தாங்க. அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பசங்ககிட்ட `இன்னும் கொஞ்சம் மட்டன் எடுத்துக்கோங்க’ன்னு சொல்லும்போது, ‘`வேண்டாம். இன்னைக்கு போதுமான புரோட்டீன் நான் எடுத்துக்கிட்டேன்’’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. அவ்வளவு சின்ன வயசுல உணவு விஷயத்துல இந்த அளவுக்கு தெளிவோட இருக்காங்களேன்னு பிரமிச்சுப்போனேன். அந்தக் குட்டி பசங்ககிட்ட நான் பார்த்து வியந்த அந்த விஷயம்தான் இன்னைக்கு வரைக்கும் என் உணவுப் பழக்கத்துக்கான அடிப்படையா இருக்கு.

காலையிலயே புரதச்சத்து மிகுந்த பயறு வகைகள் நிறைய சாப்பிடுவேன். மதியமும் இரவும் புரதத்தைக் குறைச்சுடுவேன். அதிகமா புரதத்தை எடுத்துக் கிட்டா, அது கொழுப்பாக மாறவும், எடை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கு. அதே போல, நம் உடல்ல போதுமான நார்ச்சத்து இல்லைன்னா, மலச்சிக்கல் வரும். ஆகையால, `உணவே மருந்து’ங்கிறதை எப்போதும் மனசுல வெச்சுக்கணும்.

அந்தக் காலத்திலிருந்து இப்போதுவரை நம்ம ஆட்கள் மாவுச்சத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. மாவுச்சத்தைக் குறைச்சுக்கணும். கார்போஹைட்ரேட் தேவை தான். ஆனால், அதை அதிக அளவு எடுத்துகிட்டா தொப்பை, ஊளைச் சதை, சோம்பேறித் தனம், தூக்கம்னு எல்லாம் வரும். கார்போஹைட்ரேட்டை குறைச்சுட்டு புரதத்தை அதிகப் படுத்திக்கிட்டா சுறுசுறுப்பா, எனர்ஜிட்டிக்கா இருக்கலாம். அதனால, நிறைய சிறு தானியங் களை மொத்தமா போட்டு அரைச்சு பவுடர் பண்ணி வெச்சிருக்கோம். வாரத்துக்கு இரண்டு நாள் அதுல கஞ்சி வெச்சு ரெண்டு டம்ளர் குடிப்பேன். மற்ற நாள்கள்ல தனியா ஏதாவது ஒரு சிறுதானியக் கஞ்சி இருக்கும். இந்த கஞ்சியோடு ஒரு இட்லி சாப்பிடுவேன். இதுதான் என்னோட காலை உணவு.

“வயசுங்கிறது வெறும் நம்பர்தான்...” ஜெயக்குமார் சொல்லும் சுறுசுறுப்பு டெக்னிக்..!

மதியத்துல அரிசி சாதம் நல்லா சாப்பிடுவேன். வாரத்துக்கு நாலஞ்சு நாள் நான்-வெஜ் சாப்பிடுவேன். ரெண்டு நாள் வெஜ். அதேபோல, வெளியில போகும்போது, ஏலக்காய், பட்டை, கிராம்பு, இஞ்சி போட்டு பிளாக் டீ தயாரிச்சு ஒரு லிட்டர் ஃபிளாஸ்க்ல ஊத்தி எடுத்துக்கிட்டு போயிருவேன். மதியம் சாப்பிட்டதுக்கு அப்புறம் அதை அப்பப்போ குடிச்சுப்பேன். அதுவொரு சுறுசுறுப்பைத் தரும்.

எங்களை மாதிரியான அரசியல்வாதிங்க பல நாள்கள் நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழல் உருவாகும். அப்படியான நேரங்கள்ல, வறுத்த வேர்க் கடலையோ, வாழைப் பழமோ சாப்பிட்டு தண்ணி குடிச்சிருவேன். என்னுடைய கார்ல எப்போதும் பாட்டில்ல வேர்க்கடலை இருக்கும். வேர்க்கடலையில அவ்வளவு சத்து இருக்கு. அதைக் கடையில வாங்குறது கிடையாது. பச்சை வேர்க்கடலை வாங்கி வீட்லயே வறுத்துக் கொடுத்திருவாங்க.

நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழல்ல, பலபேர் வடை, பஜ்ஜின்னு ஏதாவதொரு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுறாங்க. என்ன எண்ணெய்ல சுடுறாங்க, ருசிக்காக என்னென்ன சேர்க்கிறாங்கன்னுகூட நமக்குத் தெரியாது. சிலர் அதிக அளவுல ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுறாங்க. அதனாலேயே பல பிரச்னைகள் வரும். அதுக்காகப் பசிக்கும்போது சாப்பிடா மலும் இருக்கக் கூடாது. ஏன்னா, பசிக்கும்போது நம் வயித்துல ஒரு அமிலம் சுரக்கும். அப்ப எதுவும் சாப்பிடலைன்னா, அல்சர் மாதிரி யான பிரச்னையில கொண்டு விட்ரும். அந்த விஷயத்துல நான் கரெக்ட்டா இருப்பேன்.

அதேபோல, தினமும் எடை பார்க்கிற பழக்கம் எனக்கு உண்டு. சராசரியைவிட கொஞ்சம் எடை கூடினாலும் அடுத்த சில நாள்லயே அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துருவேன். வீட்ல ட்ரெட்மில்ல ஓடுறது, மொட்டை மாடியில 8 வடிவுல நடைப்பயிற்சி செய்யறதுன்னு தினமும் உடற்பயிற்சி செய்ய மறக்க மாட்டேன். வீட்ல சாப்பிடுறப்ப தரையில சம்மணமிட்டு உட்கார்ந்துதான் சாப்பிடுவேன். பெட்டில் உட்கார்ந்தால்கூட சம்மணமிட்டுதான் உட்காருவேன். சம்மண மிட்டு உட்கார்ந்தா, இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் வலிமையாகும். களைப்பில்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கலாம். அதுமட்டுமல்லாம, கைகளைத் தூக்குறது, கால்களைத் தூக்குறது, ஸ்ட்ரெச்சிங் பண்றதுன்னு தினமும் பத்து நிமிஷம் பண்ணுவேன்.

உணவு, உடற்பயிற்சியைவிட மிக முக்கியமா நம்ம மனசை இளமையா வெச்சுக்கணும். வயசுங்கிறது வெறும் நம்பர்தான். இளைப்பாறு வதற்கு நான் பழைய பாடல்கள் நிறைய கேட்பேன். குறிப்பா, கண்ணதாசன் பாடல்கள். அதனால், சிறு வயதிலிருந்து தத்துவ மனப்பான் மையை உள்வாங்கி வளர்ந்தவன் நான். அதனால எதற்கும் பெரிசா அலட்டிக்க மாட்டேன். அப்படி இருந்தால் நல்ல பசி இருக்கும், தூக்கம் இருக்கும், நிம்மதி இருக்கும். ஆரோக்கியம் இருக்கும்” என உற்சாகமாகப் பேசி முடிக்கிறார் ஜெயகுமார்.