Published:Updated:

`தமிழகத்தில் சந்தேகிக்கும் வகையில் கொரோனா அறிகுறிகள் இல்லை!' -சுகாதாரத்துறை செயலர்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத்துறையின் கொரோனா அப்டேட்ஸ்!

இரு தினங்களுக்கு முன், நம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. `இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்புள்ள நபர்' என்ற அந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட நிமிடம் தொடங்கி இப்போது வரை `தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கிவிட்டது' என்கிற ரீதியிலான பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.

கொரோனா
கொரோனா

விளைவு, லேசான தும்மல், காய்ச்சல் இருந்தாலே `இது கொரோனாவாக இருக்குமோ' என்ற பயம், பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவி வருகிறது. இதைத் தீர்ப்பதற்காகவும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்குவதற்காகவும், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

விமான நிலையங்களில் ஹேண்ட் சானிட்டைசர்கள் அதிகளவில் வைக்கப்படவுள்ளன.
பீலா ராஜேஷ்
கொரோனா வைரஸ்... உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளக்கங்கள்! #VikatanPhotoCards

அப்போது பேசியவர், ``கொரோனா அச்சம் தெரியவந்த நாளிலிருந்து, இதுவரை தமிழகத்துக்கு வெளிநாடுகளிலிருந்து 3,223 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே, விமான நிலையங்களிலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டனர். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இதுவரையில் அறியப்படவில்லை. இனி வருபவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதற்காக விமான நிலையங்களில், 4 இமிக்ரேஷன் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக் கூடங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தெர்மல் ஸ்கேனிங் முறை சென்னை மற்றும் திருச்சியிலும், சிஸ்டமெடிக் ஸ்க்ரீனிங் கோயம்புத்தூர், மதுரையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையங்கள் அனைத்திலும் ஹேண்ட் சானிட்டைசர்கள் அதிகளவில் வைக்கப்படவுள்ளன. ஆம்புலன்ஸ் யாவும் தயார் நிலையில் உள்ளன.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

3,223 பேரில் 579 பேர் சீனாவையொட்டியிருந்த பகுதிகளில் இருந்தவர்கள் என்பதால், அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களில் 4 பேர், பாதிப்பு ஏற்படத்தொடங்கிய வுகான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்கள் எங்களின் முழுநேரத் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். விஷயம் என்னவெனில், இதில் யாருக்குமே கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகள்கூட இதுவரை தெரியவில்லை. ஆகவே, பொதுமக்கள் பயம்கொள்ள வேண்டாம். வீண் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

தமிழகத்தில் 3,223 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

சந்தேகிக்கும் வகையில் யாருக்கும் அறிகுறிகள் தெரியவரவில்லை என்பதால், தமிழக அளவில், இதுவரையில் யாருடைய ரத்த மாதிரிகளும் பெறப்படவில்லை. இருப்பினும், பரிசோதனைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில், போதுமான அளவில் உள்ளன. நாளடைவில் யாருக்கேனும் பிரச்னை தெரியவந்தாலும்கூட, அவர்களுக்கு சோதனை செய்யும் அளவுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காகவே, இதைக் குறிப்பிடுகிறேன். வைரஸ் தொற்று தெரியவரும் பட்சத்தில், மேற்கொண்டு அவை பரவாமல் தடுக்க உதவும் மாஸ்க், உடை, ஹேண்ட் சானிட்டைசர் போன்றவையும் இங்கு போதுமான அளவு இருக்கின்றன.

கொரோனா மருத்துவ உடை டெமோ
கொரோனா மருத்துவ உடை டெமோ
கொரோனா வைரஸ் பாதிப்பு கொள்ளை நோயல்ல... பீதியடைய வேண்டாம் - மருத்துவர் கருத்து

நோயாளிகள், பொதுமக்கள் மட்டுமன்றி சேவை அளிக்கவிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் அவர்களைத் தற்காத்துக்கொள்ளும் மாஸ்க், கையுறை, சீருடை, ஷூ, தலைக்கவசம், கண்களுக்கான கவசம் போன்றவை தயாராக இருக்கின்றன. பயம் வேண்டாம்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு