Published:Updated:

ஹெல்த்: எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை?

‘பிக் பாஸ்’ அபிராமி மாதிரி எப்போதும் உங்கள் கண்களில் கண்ணீர் கசியத் தயாராக இருக்கிறதா...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தை உங்கள் பலவீனமாக நினைக்க வேண்டாம். மருத்துவரீதியாக அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். கண்ணீர் கசிந்துகொண்டே இருப்பதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் விளக்குகிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

‘‘இடைவிடாத கண்ணீர்க் கசிவுக்கு முதலும் முக்கியமுமான காரணம், கண்களின் வறட்சி. கண்கள் வறண்டு போவதால், `லாக்ரிமல் கிளாண்டு’ (Lacrimal Gland) எனும் கண்ணீர் சுரப்பி இன்னும் அதிகமாக வேலைசெய்யும். கண்ணீரின் தரம் சரியில்லாதபோதுதான் அது வெளியே கொட்டும். கண் இமைகளைச் சுற்றியுள்ள தசைகள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் கண்ணீர் கசியலாம்.

ஹெல்த்:  எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை?

கண்களையும் மூக்கையும் இணைக்கும் ஒரு குழாய்தான் கண்ணீரை இறுகச்செய்யும். இந்தச் செயல் நடைபெறாதபட்சத்தில், கண்ணீர் வெளியே கொட்டும். கண்களின் கீழ் இமைகள் உள்பக்கமோ, வெளிப்பக்கமோ சுருங்கியிருந்தாலோ, கண்களே ஓரளவு உள்ளடங்கி இருந்தாலோகூட கண்ணீர் கொட்டும்.

கண் இமைகள் வெளிப்பக்கமாகச் சுருங்கியிருக்கும் நிலையை `எக்ட்ரோப்பியான்’ (Ectropion) என்றும், உள் பக்கமாக மடங்கியிருக்கும் நிலையை, `என்ட்ரோப்பியான்’ (Entropion) என்றும் சொல்கிறோம். இவை தவிர `ட்ரிகியாசிஸ்’ (Trichiasis) என்றொரு நிலையும் உண்டு. இமைகள் சரியாக வளராமல், உள்பக்கம் திரும்பியிருக்கும்போது விழித்திரை உறுத்தலுக்குள்ளாகி, அதன் விளைவாக கண்ணீர் கொட்டும் நிலை இது.

ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கலாம். சிலருக்கு ஏ.சி-யில் இருக்கும்போது கண்கள் அளவுக்கதிகமாக வறட்சியடைவதால், கண்ணீர் கசியும். வெளிச்சத்தைப் பார்த்து கண்ணீர் கொட்டினாலோ, சூரிய ஒளி அல்லது சக்தி வாய்ந்த ஒளியைப் பார்க்கிறபோது கண்ணீர் கசிந்தாலோ, கூடவே கண்கள் சிவந்திருந்தாலோ அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெல்த்:  எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை?

தீர்வுகள்

அதிகமாக கணினி பயன்படுத்துவோர், கண்களுக்கு ஓய்வே இல்லாமல் உழைப்போர் போன்றோருக்கு கண்களில் வறட்சி ஏற்படுவது இயல்பு. இதை ‘டிரை ஐ சிண்ட்ரோம்’ (Dry Eye Syndrome) என்கிறோம். கண் மருத்துவர் இதை உறுதிசெய்து, கண்ணீருக்கு இதுதான் காரணம் எனக் கண்டறிந்தால், கண்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகளைக் கற்றுத்தருவார். தேவைப்பட்டால், வறட்சியைப் போக்கும் ஐ டிராப்ஸையும் பரிந்துரைப்பார்.

அலர்ஜியின் காரணமாக ஏற்பட்ட கண்ணீர்க் கசிவு என்றால் முதலில் அலர்ஜிக்கான காரணம் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகியிருக்கவும் அறிவுறுத்தப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு