Published:Updated:

`கொரோனா காலத்தில்... ஆரோக்கிய வாழ்வு!'-ஆனந்த விகடனின் இலவச வெபினாரில் கு.சிவராமனுடன் கலந்துரையாடலாம்

corona webinar
corona webinar

இந்தக் கொரோனா காலத்தில், ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்ட வருகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

கோவிட்-19 நோய்த்தொற்று

கொரோனா காலம்... கொரோனாவைப் பற்றிய சந்தேகங்கள், உடல் எதிர்ப்பாற்றல், உணவுமுறையில் மேற்கொள்ள வேண்டிய அக்கறை, உடல் நலத்தைப் பேணச் செய்ய வேண்டியவை... இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன்... மே 18-ம் தேதி ஆனந்த விகடன் வழங்கும் இலவச வெபினாரில்.

ஆரோக்கியத்தின் அருமை, ஆரோக்கியமாக இருக்கும்போது உணரப்படுவதில்லை. பொதுவாக, ஒரு நோவு வரும்போதுதான் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வோம். அந்த வகையில், இப்போது கோவிட்-19 நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் இவ்வேளையில், உணவு முதல் வாழ்க்கைமுறை வரை ஆரோக்கியத்தையே முன்னிறுத்தி வாழப் பழகிவருகிறார்கள் மக்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த பேண்டமிக் காலத்தில் கொரோனா எந்தளவுக்குப் பேசுபொருளானதோ அந்தளவுக்கு இணையாக, ஆரோக்கிய உணவுகள், நோய் எதிர்ப்பு சக்திக்கான வழிகள், பாரம்பர்ய மூலிகைகள் பற்றியும் பேசப்பட்டது. மக்கள், தங்கள் உடல்நலனுக்கு எவை எவையெல்லாம் நல்லவை என இணையம் முதல் தொலைக்காட்சிவரை தேடித் தேடி அறிந்து பின்பற்றத் தொடங்கினார்கள். 'கொரோனாவுக்கு இன்றுவரை தடுப்பூசியோ, சிகிச்சை மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை' என்ற நிதர்சனம், பல நாடுகளிலும் மக்களை அவர்களின் பண்டைய மருத்துவ முறை நோக்கித் திரும்ப வைத்தது.

சித்த மருத்துவம்

'வீட்டுல எல்லாரும் நல்லா, ஆரோக்கியமா இருக்கணும், என்ன பண்ணணும் சொல்லுங்க' என்ற தேடல், இன்று வீடுதோறும் தொடங்கியிருப்பது கண்கூடு. இந்தக் கொரோனா காலத்தில், ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்ட வரும் சித்த மருத்துவர் கு.சிவராமன், வரும் வியாழன் மாலை 6 மணி முதல் 7 மணிவரை, இணையவழியில் விகடன் வாசகர்களுடன் உரையாடவிருக்கிறார். ''கொரோனாவைப் பற்றிப் பேசுவோம். அதைத் தாண்டி உடல் எதிர்ப்பாற்றல், உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய அக்கறை, உடல் நலத்தைப் பேணச் செய்ய வேண்டியவை... இவை பற்றியெல்லாம் உங்களுக்கு இருக்கும் கேள்விகள் குறித்து நாம் பேசலாம், விவாதிக்கலாம். அனைவரும் கலந்துகொள்ளவும்'' என்று அழைக்கிறார் கு.சிவராமன்.

மருத்துவர் கு. சிவராமன்
மருத்துவர் கு. சிவராமன்

வரும் வியாழன்(18.6.2020) மாலை 6 மணி முதல் 7 மணிவரை, ஆனந்த விகடன் வழங்கும் 'கொரோனா காலத்தில்... ஆரோக்கிய வாழ்வு!' இலவச வெபினாரில் கலந்துகொள்ள, பின்வரும் லிங்க்கில் பதிவு செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு