Published:Updated:

`ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் டிமென்சியாவுக்குச் சொல்லலாம் குட் பை!' - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு

ஜெ.நிவேதா
ஜெனி ஃப்ரீடா

முதுமையில் ஏற்படும் டிமென்சியா பாதிப்பை 32 சதவிகிதம் தடுக்கமுடியும்!

டிமென்சியா
டிமென்சியா ( Pixabay )

முதியோரைப் பாதிக்கும் 'டிமென்சியா' என்ற ஞாபக மறதி நோயால் உலக அளவில் 5 கோடி பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிமென்சியா
டிமென்சியா
Pixabay

ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் இந்த நோயால் புதிதாகப் பாதிக்கப்படுவதாகவும் 2050-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக ஆகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

ஆனால், `ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால் முதுமையில் ஏற்படும் டிமென்சியா பாதிப்பை 32 சதவிகிதம் தடுக்கமுடியும்' என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றினால், எதுவுமே சாத்தியம்தான்
ஆராய்ச்சியாளர் டேவிட் லெவெலின்
'வாரம் 3 முறை ட்ரெட் மில் செய்தால், மாதவிடாய் வலியைக் குறைக்கலாம்' - ஆய்வு முடிவு!

இந்த ஆய்வுக்காக, கடந்த எட்டு ஆண்டுகளாக ஐரோப்பாவைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த சுமார் இரண்டு லட்சம் முதியவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டனர்.

அவர்களில், மரபணு குறைபாடு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை முன்னெடுத்தவர்களைவிடவும் டிமென்சியா பாதிப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

டிமென்சியா
டிமென்சியா
Pixabay

ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான டேவிட் லெவெலின் பேசும்போது, ``மரபணு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் பலரும் டிமென்சியா பிரச்னையைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது என நினைக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றினால், எதுவுமே சாத்தியம்தான்" என்று கூறி 'தம்ஸ் அப்' காட்டியுள்ளார்.