Published:Updated:

``வெயிலுக்குக் கொரோனா கட்டுப்படும் என்று மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டாம்!'' - உலக சுகாதார நிறுவனம்

"வெப்பமயமான சூழலில் கொரோனா பரவல் தடுக்கப்படுமா?" - உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு லட்சம் பேரைத் தாண்டி கட்டுக்குள் அடங்காமல் உலக நாடுகள் அனைத்திலும் பரவிக்கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் இறப்பு எண்ணிக்கை 3,500-ஐத் தாண்டிவிட்ட சூழலில், இத்தாலியில் கொரோனா பயத்தால் 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா
கொரோனா
Pixabay

இந்தியாவில், இந்த ஒரு வாரத்தில் மட்டும் 39 கொரோனா பாதிப்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் பிப்ரவரி தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் பிப்ரவரி இறுதியில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், ராஜஸ்தான் வந்துள்ள இத்தாலி நாட்டுப் பயணி ஆகிய மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. பின்னர், இவர்களோடு பழகிய இன்னும் 22 பேருக்குக் கொரோனாவின் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இத்தாலியப் பயணியோடு தொடர்புடைய 15 பேர், வட இந்தியாவின் வாகன ஓட்டுநர் ஒருவர், டெல்லி நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் என இவர்கள் அனைவருடைய பாசிட்டிவ் ரிசல்ட்களும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. இப்படியாக இப்போதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 39 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை உறுதிசெய்ய, இதுவரை இந்தியாவில் 52 ஆய்வுக்கூடங்க்கள் இருந்து வரும் சூழலில், மாதிரிகள் (Samples) கலெக்ட் செய்ய இன்னும் 57 ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என நேற்றைய தினம் கூறியுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

கொரோனா
கொரோனா
இந்தியாவின் கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்தான் என்ற போதிலும், `இந்தியாவுக்குள் நோயாளிகள் இருக்கின்றனர்' என்பது நம் மக்களை பீதியடைய வைக்கிறது.
வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை
உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், `இந்தச் சூழலில் பயம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே முக்கியம்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதிகாரிகள் குறிப்பிடும் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதலும் முக்கியமுமானது, சுயசுத்தம். ஹேண்ட் சானிட்டைஸர், ஹேண்ட் வாஷ், சோப் போன்றவற்றில் ஏதேனுமொன்றின் மூலம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகழுவிக் கொண்டே இருங்கள் என்கின்றனர் அதிகாரிகள். அடுத்ததாக, இருமல், தும்மலின்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்வது.

ஹேண்ட் சானிட்டைஸர்
ஹேண்ட் சானிட்டைஸர்
கொரோனா வைரஸ்... தொற்றாமலிருக்க இவற்றையெல்லாம் தொடாதீர்கள்! #VikatanPhotoCards

இதற்கு இடையில், `இவையெல்லாம் கொரோனாவைத் தடுக்கும்' என சில நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றன. அந்த நம்பிக்கைகளுக்குப் பின்னிருக்கும் உண்மைத்தன்மை குறித்து இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். அந்த நம்பிக்கைகளில் முக்கியமானது, வெப்பமயமான சூழலில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும் என்பது. ஆனால் இந்தக் கருத்தை மறுத்து, இந்த நம்பிக்கைகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ் இதுகுறித்துப் பேசும்போது, "உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி நோய் இப்போது பரவி வருகிறது. ஆகவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியமாக இருக்கிறது.

பருவநிலை
பருவநிலை

வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்தோடு செயல்பட்டு, நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம். மாறிவரும் தட்பவெப்பதுக்கு ஏற்ப கொரோனா எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்ளும் என்பது கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியத்திடம் இதுகுறித்துக் கேட்டோம். "கொரோனா என்றில்லை, சளிக்காய்ச்சலுக்கான எந்தவொரு வைரஸ் - பாக்டீரியா தொற்றுமே, பருவநிலை சார்ந்து அமையாது. சொல்லப்போனால் வெப்பம், குளிர், மிதமான சூழல் என எதைப் பொறுத்தும் வைரஸின் தீவிரம் அதிகரிக்கவோ குறையவோ செய்வதில்லை.

தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்
தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்

வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழி, மருந்து கண்டுபிடிப்பதுதான். அதுவரையில், சுயசுத்தம் பேணுவது, அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றைச் செய்வதன் மூலமாக நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுக்கலாம் என்பதால், இப்போதைக்கு வேறு எதையும் யோசிக்காமல், அதை மட்டும் செய்வோம்" என்றார் அவர்.

கொரோனா குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் பிற நம்பிக்கைகளுக்கும், உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அவற்றை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கொரோனா சந்தேகங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்! #VikatanPhotoCards
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு