Published:Updated:

`மாரடைப்பால் உயிரிழந்தவர்களிடமிருந்தும் உறுப்பு தானம் பெறலாம்!'- தமிழத்தில் விரைவில் அறிமுகம்

மாரடைப்பு
மாரடைப்பு ( Pixabay )

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்தும் உடலுறுப்புகளைத் தானம் பெறும் முறை தமிழகத்தில் விரைவில் அறிமுகம்.

சாலை விபத்து, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் போன்ற உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுவது வழக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை, உடலுறுப்புகள் தானத்தில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

மூளைச்சாவு
மூளைச்சாவு

உடலுறுப்பு தானத்தின் அடுத்தநிலையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்தும் உடலுறுப்புகளைத் தானம் பெறும் முறை தமிழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2019-ம் ஆண்டு லண்டனில் உள்ள கிங் மருத்துவக் கல்லூரியுடன் தமிழக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இதற்கான முற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

``புது இதயத்தோட அவரப் பார்த்தப்போ...!?’’ - இதயம் மாற்றப்பட்ட தொழிலாளி மனைவியின் நெகிழ்ச்சி

இதயத்தின் செயல்பாடு நின்றுபோனதால் உயிரிழந்தவர்களிடமிருந்து முக்கிய உடலுறுப்புகளைத் தானம் பெற முடியும்.

இதய செயல்பாடு
இதய செயல்பாடு

இதயம் நின்று போனதால் இறந்துபோன நோயாளிகள் ஒரு கருவியில் பொருத்தப்படுவார்கள். அதன்பிறகு நின்றுபோன இதயத்துக்கு ரத்தம் செலுத்தப்பட்டு அந்த உடலிலிருந்து நீக்கப்படும். மீதமுள்ள உடலுறுப்புகளைத் தானம் பெறும்வரை இதயம் வெளியிலுள்ள கருவியின் உதவியால் செயல்படும்.

இறுதியாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உடலிலிருந்து நீக்கப்பட்ட இதயத்தின் செயல்பாட்டைப் பரிசோதிப்பார்கள்.

செயல்பாடு சரியாக இருக்கும்பட்சத்தில் அந்த இதயத்தையும் மற்றொரு நோயாளிக்குப் பொருத்த முடியும்.
பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

``இந்த முறையில் இங்கிலாந்தில் பல உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதனால் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளனர். இங்கிலாந்து மருத்துவர்கள் ஏற்கெனவே சென்னைக்கு வந்து நரம்பியல் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைமுறை குறித்து கலந்து ஆலோசித்துவிட்டுச் சென்றுள்னர்" எனத் தமிழக சுகாதாரத் துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு