Published:Updated:

`ஒமிக்ரானைவிட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வேரியன்ட்!' - எச்சரிக்கும் WHO; வரலாறு திரும்புகிறதா?

Covid Outbreak (Representational Image) ( AP Photo/Jean-Francois Badias )

புதிய XE வைரஸானது ஒமிக்ரானின் BA. 2 பிறழ்வைவிட (Mutation) 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், BA.2 உடன் ஒப்பிடும்போது அதன் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் தெளிவு ஏற்பட தொடர் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என புதுப்புது திரிபுகளாக உருமாறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலைக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் பாதிப்புகள் குறைந்து கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமல்ல, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமல்ல என்பன போன்ற தளர்வுகள் அமலாகியுள்ளன.

Britain
Britain
AP Photo / Kirsty Wigglesworth

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸின் உருமாற்றமடைந்த XE வைரஸ் பரவுதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரானைவிட அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. XE என்பது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய XE வைரஸானது ஒமிக்ரானின் BA. 2 பிறழ்வைவிட (Mutation) 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், BA.2 உடன் ஒப்பிடும்போது அதன் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் தெளிவு ஏற்பட தொடர் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

Mutations
Mutations
Pixabay

இதுபற்றி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னளில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள், ``ஒரு நபர் பலவகை வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்படும்போது, அவற்றின் மரபுப்பொருள்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்து புதிய உருமாற்றம் ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள பிரிட்டனின் சுகாதார ஏஜென்சி, `XE வகை வைரஸ் ஜனவரி 19-ம் தேதி கண்டறியப்பட்டது. இதுவரை 637 உருமாற்றமடைந்த வைரஸ் பரவியுள்ளது எனப் பதிவாகியுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரானின் BA.2 வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், மார்ச் 26 -ம் தேதி நிலவரப்படி, பிரிட்டனில் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தைவிட 600,000 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு தேசிய புள்ளியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

London
London
AP Photo/Matt Dunham

கடந்த மூன்று அலைகளைப் பொறுத்தவரை, பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலும் மெள்ள பாதிப்புகள் அதிகரித்து உச்சநிலையை அடைந்தன. இந்நிலையில், அதே போன்று இம்முறையும் பிரிட்டனுக்குப் பிறகு இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்குமா என்ற கோணத்தில் நிபுணர்கள் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism