Published:Updated:

`அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இப்படிச் செய்கிறார்கள்!' - திருநங்கை நூரி ஆதங்கம்

எம்.மரிய பெல்சின்

ஹெச்.ஐ.வி பாதித்த சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு! வலுக்கும் எதிர்ப்பு...

பள்ளி
பள்ளி ( Pixabay )

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது. இந்தத் தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. இந்த நிலையில், நோய் தீவிரமாகி மனைவி உயிரிழந்துவிட்டார். லாரி ஓட்டுநரான கணவர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார். தம்பதியின் மகன் கொளக்காநத்தம் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்ததையடுத்து கடந்த ஆண்டு பெரம்பலூர் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்.

ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி
Pixabay

ஹெச்.ஐ.வி. தாக்கத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக அந்தச் சிறுவன் அடிக்கடி விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 10-ம் வகுப்பை மீண்டும் கொளக்காநத்தம் அரசுப் பள்ளியிலேயே தொடர வைக்கலாம் என்று அந்தப் பள்ளியில் சேர்க்க தந்தை முயன்றிருக்கிறார். ஆனால், பள்ளியில் சேர்க்க அனுமதியளிக்காமல் தலைமையாசிரியர் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவரைத் தொடுவதால் அது மற்றவருக்குப் பரவாது என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், அந்தச் சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுத்திருக்கிறார்கள்.
திருநங்கை நூரி

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் காமராஜிடம் கேட்டபோது, `அந்தச் சிறுவனுக்கு கற்றல்திறன் குறைவாக இருப்பதாகவும் அந்தச் சிறுவனின் `அட்மிஷன்' தொடர்பாக யாரும் தன்னை அணுகவில்லை' என்றும் கூறியுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் அரங்கனின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர், மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கை நூரி
திருநங்கை நூரி
ஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றியை எட்டிய ஆராய்ச்சியாளர்கள்!

இந்த விவகாரம் தொடர்பாக, ஹெச்.ஐ.வி பாதித்த 200 குழந்தைகளைப் பராமரித்து வருபவரும் சவுத் இந்தியன் பாசிட்டிவ் நெட்வொர்க் அமைப்பின் தலைவருமான திருநங்கை நூரி மிகுந்த வருத்தத்துடன் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, "2000-ம் ஆண்டில்தான் சமுதாயத்தில் ஹெச்.ஐ.வி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. அப்படியொரு நிலை மீண்டும் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவரைத் தொடுவதால் அது மற்றவருக்குப் பரவாது என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், அந்தச் சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுத்திருக்கிறார்கள். பள்ளி தலைமையாசிரியருக்கும் இந்த நோய் பற்றிய புரிதல் இல்லை. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிப் புரியவைக்கும் இடத்தில் இருப்பவர் இப்படி நடந்துகொள்வது ரொம்பவே காயப்படுத்துகிறது.

`சுகாதாரத்தில் முன்மாதிரி மாநிலம், கல்வியில் முன்மாதிரி மாநிலம்' என்று சொல்லும் அரசு, இந்த விஷயத்தில் ஏன் இப்படிச் செயல்படுகிறது?
திருநங்கை நூரி ஆதங்கம்
குழந்தை
குழந்தை
Pixabay

இந்த விஷயத்தில் தமிழக சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? `சுகாதாரத்தில் முன்மாதிரி மாநிலம், கல்வியில் முன்மாதிரி மாநிலம்' என்று சொல்லும் அரசு, இந்த விஷயத்தில் ஏன் இப்படிச் செயல்படுகிறது? பாதிக்கப்பட்ட மாணவனை உடனடியாக பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.