Published:Updated:

`ஹோட்டல்கள், விமானங்களில் சர்க்கரைக்குப் பதில் தித்திக்கும் தேன்?’ - மத்திய அமைச்சரின் புதிய ஐடியா

தேன்
தேன் ( Pixabay )

தேன் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

ஏர் இந்தியா மற்றும் பிற நிறுவன விமானங்களில் தேன் பயன்படுத்த பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விமானங்களில் பயணிப்போருக்கு வழங்கப்படும் டீ, காபி போன்ற பானங்களில் உபயோகிப்பதற்கு சிறிய சர்க்கரை பாக்கெட் வழங்கப்படுகிறது.

flight
flight
Freepik

அந்த பாக்கெட்டுகளுக்குப் பதில் தேன் வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

புனேயில் நடைபெற்ற மத்திய தேனீக்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "பொதுவாக ஒரு டேபிள்ஸ்பூன் தேன் என்பது மூன்று டேபிள் ஸ்பூன் சர்க்கரைக்கு இணையானது.

தற்போது விமானங்களில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைதான் வழங்கப்படுகிறது. ஹோட்டல்கள் மற்றும் விமானங்களில் தேன் பாக்கெட்டுகள் அல்லது சர்க்கரை கியூப்ஸ் வழங்க முயன்று வருகிறோம்.

Nitin Gadkari
Nitin Gadkari
Vikatan

சர்க்கரை, தேன் இரண்டும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள், பயணிகள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

அடுத்தகட்டமாக, ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோஏர் நிறுவனத்தினர் மற்றும் காந்தி கிராமயோக் கமிஷனின் தலைவர் ஆகியோரை அழைத்து, இந்த மாற்று முயற்சி குறித்து கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

honey production
honey production
Pixabay

தேன் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்ய திட்டமிட்டு வருகிறோம். அதற்காகத் தேன் உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள், கொள்முதல் செய்வோர் அனைவரும் ஒரே குடையின் கீழ் சந்திக்கும் வகையிலான அமைப்பை உருவாக்கவிருக்கிறோம். அதன் மூலம் கிராமப்புற மற்றும் மலைப்புற மக்கள் அதிக எண்ணிக்கையில் தேன் உற்பத்தியில் ஈடுபட முடியும். அதன் மூலம் கிராமப்புற மற்றும் மலைப்புற பொருளாதாரமும் மேம்படும்" என்று பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு