Published:Updated:

கோவிட்-19: இரண்டாம் அலை வருமா...!?

பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய கேள்வி... கொரோனாவின் இரண்டாம் அலை வந்துதான் ஆகணுமா என்பதே...

லகமே இன்று உச்சரித்துக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் கோவிட் 19 இரண்டாம் அலை (Second wave of Pandemic).

பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய கேள்வி... இரண்டாம் அலை வந்துதான் ஆகணுமா என்பதே. அதென்ன சட்டமா எனக் கேட்பவர்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன்... இது ஒரு பெருந்தொற்று (Global Pandemic).

பெருந்தொற்றுகள் என்பவை கண்டம் விட்டு கண்டம் பரவக்கூடிய வல்லமை பொருந்தியவை. அந்த வகையில் உலகின் கண்டங்கள் அனைத்தையுமே எட்டிப்பார்த்துவிட்ட பெருந்தொற்றுதான் இந்த கொரோனா!

mask
mask

கொரோனா என்பது புதிய வைரஸ்... இதற்கு முன்னர் இப்படி ஒரு வைரஸே இருந்ததில்லை என்பதும் பொய்,

Human coronaVirus ( HuCoV) எனும் சாதாரண கொரோனா வைரஸ் பல யுகங்களாகவே நம் மனித உடலில் சளி, இருமல் கொடுத்திடும் சாதாரண வைரஸாக இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால், பொதுவாகவே வைரஸ் கிருமிகள், அவை தொற்றும் நபர்களுக்கு (Host) ஏற்றவாறும், காலம், நாடு, சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்பவும் தம்மை உருமாற்றும் சக்திகொண்டவை. இதை மருத்துவ நுண்ணியல் துறையில் Antigenic Shift and Drift என பிரித்துச் சொல்வோம்.

அப்படிச் சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் வந்த SARS-CoV எனப்படும் Severe Acute Respiratory Syndrome Corona வைரஸ், MERS CoV (Middle East Respiratory Syndrome) Corona வைரஸ் எனவும், சாதாரண HuCoV எனப்படும் வைரஸ், மிகத்தீவிரமான நோய் பரப்பும் கொரோனா வைரஸாகவும் தம்மை உருமாற்றிக் கொண்டன.

ஆனால், இவ்விரண்டு வைரஸ்களும் கண்டம் தாண்டியோ, நாடு தாண்டியோ சென்றிடும் அளவு வீரியம் மிக்கதாக இல்லாமல் இருந்ததாலேயே அப்போது பெருந்தொற்று ஏற்படாமல் போனதாகக் கூறப்படுகிறது.

A health worker uses a rapid kit to test for COVID-19 at a testing center in New Delhi, India
A health worker uses a rapid kit to test for COVID-19 at a testing center in New Delhi, India
AP Photo/Altaf Qadri

இம்முறை சீனாவில் பரவிய SARS-CoV-2 எனும் Severe Acute Respiratory Syndrome Coronavirus - 2 என்பது தம்முடைய வைரஸ் ஸ்பைக் புரோட்டீன் மற்றும் உள்ளே இருக்கும் வைரஸ் மரபணுவை மிக அதீத தொற்று தரக்கூடியதாக உருமாற்றம் செய்து வந்திருப்பதே உண்மை. அதனால்தான் இன்றளவும்கூட இதன் பரவலும் நோய்த் தாக்கமும் குறைந்தபாடில்லை!

கோவிட்-19: இரண்டாம் அலை ஏன் இன்னும் ஆபத்தாக இருக்கலாம்? விளக்கும் மருத்துவர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த அக்டோபர் மாதத்தின் கடைசி 10 நாள்களிலிருந்து நாட்டில் பெரும்பாலான இடங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை நாம் பார்க்கிறோம். அதே நேரத்தில் கேரளா மற்றும் டெல்லியில் கிட்டத்தட்ட 2-ம் அலை உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். ஐரோப்பாவிலும் இதே நிலைதான். இதன் காரணமாக அந்த அரசு இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவித்திருப்பதை நாம் அறிவோம்.

கடந்த ஜனவரியில்தான் நம் நாட்டின் முதல் தொற்றாளர், கேரளாவில் கண்டறியப்பட்டார். அது Imported Case. அதாவது, வெளிநாட்டிலிருந்து நமக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொற்றாக இருந்தது.

Dr. சஃபி .M. சுலைமான்

நீரிழிவு சிறப்பு மருத்துவர்
Dr. சஃபி .M. சுலைமான் நீரிழிவு சிறப்பு மருத்துவர்

அடுத்தடுத்து, ஆங்காங்கே விமானம் மற்றும் போக்குவரத்து காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட வைரஸ் தொற்றுகள் ஒவ்வொரு மாநிலமாகப் பெருகின. எந்தப் பாகுபாடும் இன்றி, இந்தத் தொற்றானது பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய நோய்த் தாக்கத்துக்கு ஏற்றாற்போல சுழன்று அடித்தது.

சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாடகர் எஸ்.பி.பி, வசந்தகுமார் MP, பல மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள், கடைசியாக நம் வேளாண்துறை அமைச்சர் வரை அதன் கொடூர அசுர தாக்கத்தைக் கண்டு உறைந்து போயிருக்கிறோம் நாம்.

தற்போது சற்றே குறைந்துபோன தொற்று எண்ணிக்கை ஒருவித நிம்மதியைக் கொடுத்திருப்பது மிகப்பெரிய ஆபத்து. தடுப்பூசி இல்லாத நிலையில் நோய் குறைந்து வருவதாக நாம் யூகிப்பதும் ஆறுதல் கொள்வதும் சரியானதல்ல.

எல்லாவிதமான பெருந்தொற்றுகளுக்கும் 3 அலைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

அதென்ன 3 அலைகள்?

உண்மை என்னவெனில் 3 அலைகளுக்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் தொற்றைப் பெற்றுவிடுவர்.

சிலர் இறப்பர்,

சிலர் நோய்ப்பிடியில் இருந்து மீள்வர்,

பலர் நோய் தாக்காமல் காக்கப்படுவர்.

அதன் பின்னர் இந்த வைரஸ் தொற்று நோய்ப்பரவலுக்கான வலுவை இழந்து நிற்கும்.

இவை இயற்கையான நோய் நுண்ணியல் உண்மைகள்.

Students attend classes as schools in north-eastern Assam state reopen after being closed for months due to the coronavirus pandemic in Gauhati, India
Students attend classes as schools in north-eastern Assam state reopen after being closed for months due to the coronavirus pandemic in Gauhati, India
AP Photo/Anupam Nath
`பிளாஸ்மா சிகிச்சை பயனில்லை' எனும் ஐசிஎம்ஆர்... தொடரும் ராதாகிருஷ்ணன்... ஏன்?

இதில் பெரும்பாலான தொற்றுகள் 2-ம் அலைக்கு முன்னரோ, 2-ம் அலை அடிக்கும் தறுவாயிலோ தரமான தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி நமக்கு ஒரு தரமான தடுப்பூசி கிடைக்கும் சாத்தியம் 2021 மே மாதம் வரை இல்லை என்றே தெரிகிறது. அப்படியே வந்தாலும் நாட்டின் கடைக்கோடி சாமானியனுக்கும் தடுப்பூசி சென்று சேர்வதற்கு எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

அதற்குள் இந்த இரண்டாம் அலை நம்மை துவம்சம் செய்துவிட்டுப் போகவும் வாய்ப்புண்டு என்பதே பல ஆய்வுகளின் கணிப்பு. அதே நேரத்தில், இரண்டாம் அலையில் நோய்ப் பரவலின் வேகம், முதல் அலையைக் காட்டிலும் மிக வேகமாகவும் தீவிரமாகவும் இருப்பதைக் காண முடியும். அடுத்த அலையில் வைரஸ் மேற்கூறிய நுண்ணியல் உருமாற்ற காரணங்களால் இதைவிட வித்தியாசப்பட்டு மாற்றத்துடன் உருமாறி வந்துவிட்டால், தற்போது இருக்கும் அறிகுறிகள் அற்ற நோயாளிகள் விகிதம் 85 சதவிகிதத்தில் இருந்து கணிசமாகக் குறையலாம்.

corona
corona
AP Photo / Channi Anand

தற்போது இருக்கும் இறப்பு விகிதம் 7 சதவிகிதத்தில் இருந்து மிக அதிகமாக உயரலாம்.

இதன் காரணமாகப் பல நோய்த்தொற்றாளர்களும், நோய் வந்து மீளாத நோய் நீட்சி எனும் Post Covid 19 Long hauler's களும், Fatal Death Rate எனப்படும் கோவிட் 19 இறப்புகளும் அதிகரிக்கலாம்.

முதல் அலை எப்படி கேரளத்தில் தொடங்கியதோ, அதேபோன்ற இரண்டாம் அலைக்கான தொடக்கமும் கேரளாவிலேயே ஆரம்பித்திருப்பது நிச்சயமாக நமக்கான ஒரு சமிக்ஞைதான்.

மிக முக்கியமாக வயது முதிர்ந்தோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, கேன்சர், இதயம், சிறுநீரக நோயாளிகள் தங்களை Reverse Quarantine எனப்படும் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ள முன்வாருங்கள்.

அரசும் சுகாதாரத்துறையும் மேற்கத்திய நாடுகளில் உள்ள நெறிமுறைகளைப்போல்,

Early Identification

Complete Isolation

Prompt Intervention

எனும் 3 `I' களை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்தல் நன்று.

social distancing
social distancing
AP / Sakchai Lalit

மேலும், தடுப்பூசி வரும்வரை, வந்தாலும் தடுப்பூசி நமக்கெல்லாம் கிடைத்திடும்வரை, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, அடிக்கடி கைகழுவுதல் எனும் முத்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பேணிடுவோம்.

விழாக்களும் பண்டிகைகளும், ஒன்று கூடுதலும், காலங்காலமாக நடப்பவையே. அவை அடுத்த வருடமும் வரும். ஆனால், கொரோனாவை இவ்வருடத்துடன் நிறுத்தத் தவறினால் அது மீட்க முடியாத பேரிழப்பாக மாறிடலாம்!

இரண்டாம் அலை பற்றிய சிந்தனையை எப்போதும் நினைவில் கொண்டு எச்சரிக்கையாய் இருந்திடுவோம்.

- Dr. சஃபி M. சுலைமான், நீரிழிவு சிறப்பு மருத்துவர், நாகர்கோவில்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு