Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி செலுத்தி, கொரோனா டெஸ்ட் செய்த பயணிகளின் மூலம் ஒமைக்ரான் எப்படி பரவுகிறது?

Airport (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: தடுப்பூசி செலுத்தி, கொரோனா டெஸ்ட் செய்த பயணிகளின் மூலம் ஒமைக்ரான் எப்படி பரவுகிறது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Airport (Representational Image) ( Pixabay )

நாடுவிட்டு நாடு பயணம் செய்கிறவர்களை, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்த பிறகே அனுமதிக்கிறார்கள். பயணத்துக்கு முன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடமிருந்து ஒமைக்ரான் வைரஸ் எப்படி மற்றவர்களுக்குப் பரவும்?

- அமுல்யா (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகிவிட்டது. ஆரம்பத்தில் இது குறித்த பல தகவல்கள் நமக்குத் தெரியாமலிருந்தன. இதன் தாக்கம் எப்படி இருக்கும், முந்தைய அலைகளைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சம் இருந்தது.

இப்போது நமக்கு சில விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. இந்தத் தொற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொற்றின் உருமாற்றத் தன்மையாக இருக்கிறது.

உருமாறிய வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசிகள் ஓரளவுக்குதான் பாதுகாப்பு அளிக்கும். இப்போது நமக்கு இருக்கும் முதல்நிலை தடுப்பூசிகள், நோய் எதிர்ப்புக்கு உதவுவதுடன், ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர பாதிப்பாக மாறாமல் காக்கும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் கழித்தே அதன் முழுமையான பாதுகாப்பு ஆரம்பிக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக்கூட தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர பாதிப்பாக மாறியதாக இதுவரை நாம் கேள்விப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கே தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. எனவே, தடுப்பூசியைத் தவிர்க்காமல் இரண்டு டோஸும் போட்டுக்கொள்ள வேண்டும்.

சில நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் வைரஸ் உருமாற்றம் அடைகிறது. அப்படி உருமாறும் வைரஸானது, அங்கிருந்து பயணிப்பவர்கள் மூலம் மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. இதுதான் அடிப்படை. அந்த வகையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தொற்று பாதிக்க வாய்ப்பிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவர்களுக்கும் பாதிப்பு குறையும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதும் குறையும்.

Samples to test for COVID-19
Samples to test for COVID-19
AP Photo / Dar Yasin

ஆர் டி பிசிஆர் டெஸ்ட், அந்த நேரத்தில் அவர்களுக்குத் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதையே காட்டும். வழக்கமாக 72 மணி நேரத்தில் தொற்று பாதித்திருக்கிறதா என்பதையே கணக்கில் எடுக்கிறார்கள். அறிகுறிகள் இல்லாதவர்களை இந்தக் காலகட்டத்தில் தவறவிட வாய்ப்புண்டு. அப்படித் தவறவிடப்படுபவர்கள் மூலம் அவர்களுடன் பயணிப்பவர் களுக்கும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு முன் இது பல இடங்களுக்குப் பரவியிருக்கக்கூடும். எனவே, பயணம் செய்பவர்களை மட்டும் தடுப்பது சாத்தியமில்லாதது. தொற்றுப்பரவலுக்கான மொத்தப் பழியையும் அவர்கள் மேல் சுமத்துவதும் சரியான விஷயமல்ல. அப்படியே அவர்கள் மூலம் தொற்று பரவினாலும் அதை அவர்கள் வேண்டுமென்று செய்வதுமில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?