Published:Updated:

பாலிவுட்டில் மட்டுமல்ல; கோலிவுட்டிலும் தலைவிரித்தாடும் போதை மோகம்; எங்கே, எப்படி? - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image) ( Photo by Ramille Soares on Unsplash )

போதைப் பழக்கத்துக்கும் அதன் அடிமைத்தனத்துக்கும் கோலிவுட்டும் கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி இரவு, மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை விருந்து நடந்துகொண்டிருந்ததாகத் தகவல் கசிந்தது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள், பயணிகள் போல அந்தக் கப்பலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

கப்பல் கிளம்பியதும் பார்ட்டி களைகட்டத் தொடங்கியது. அந்த விருந்தில் பங்கேற்ற சிலரிடம் போதைப்பொருள்கள் இருந்ததாகக் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான பெரிய இடத்துப் பிள்ளைகளில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யனும் ஒருவர். விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஷாருக் மகனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பாலிவுட் பிரபலங்கள் பலரும்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

``ஆர்யன் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்திருக்கிறார். ஆர்யனின் கைது நியாயமற்றதும் வருத்தத்துக்குரியதுமான நிகழ்வு. அவர் மிகவும் நல்ல குழந்தை. இந்த விஷயத்தில் நான் ஷாருக்கானுக்கும் அவரின் மனைவி கௌரிக்கும் ஆதரவாக நிற்பேன்!'' என்று தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் சூசன் கான். இவர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி.

ஹிருத்திக் ரோஷனுக்கும் இவருக்குமான விவாகரத்துக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது சூசனின் போதைப் பழக்கம். இந்த விவகாரம் குறித்து அப்போது சூசனின் அப்பாவிடம் கேட்கப்பட்டபோது அவர் மகளின் போதைப் பழக்கத்தை மறுக்காமல், மழுப்பலாகப் பதிலளித்ததை மும்பை ஊடகங்கள் எழுதின. அப்படிப்பட்ட சூசன்தான் இன்று தன் நெருங்கிய நண்பர் குடும்பத்து வாரிசுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

ஒருமுறை சிறிய அளவிலான போதைப் பொருள் வைத்திருந்ததற்காக பெர்லின் ஏர்போர்ட்டில் பிடித்து வைக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டார் பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி. அவர் பெயர் வெளியே கசிந்துவிடாதபடி மூடி மறைக்கப்பட்டாலும், `அவர் வேறு யாருமல்ல; ஷாருக்கின் மனைவியும் ஆர்யனின் அம்மாவுமான கௌரி' என அதையும் ஊடகங்கள் மோப்பம் பிடித்து எழுதின.

``அன்று காலை எழுந்திருக்கும்போதே எனக்கு பயங்கர பசி. வீட்டில் வேலை செய்பவரிடம் `எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது வேண்டும்' என்றபோது, `தம்பி நீங்க சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. ரெண்டுநாளா நீங்க எழுந்திருக்கலை...' என்றார் அவர். கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

என் முகத்தில் சவக்களை... என் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. உடனே என் அப்பாவிடம் ஓடினேன். நான் போதைக்கு அடிமையாகியிருந்த உண்மையைச் சொல்லி, அதிலிருந்து மீள அவரிடம் உதவி கேட்டேன்.

அப்பா உடனே என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று போதை மீட்பு மையத்தில் சேர்த்தார். அங்கே இரண்டு வருடங்கள் சிகிச்சை பெற்றேன். சிகிச்சையிலிருந்தபோதே இனிமேல் போதைப்பொருளை என் வாழ்நாளில் தொட மாட்டேன் என்று சபதம் எடுத்தேன். அப்பாவுக்கு நன்றி சொல்லி, அவர் எனக்கு உதவியதைப் போல நானும் மற்றவர்களைப் போதை அடிமைத்தனத்திலிருந்து மீட்க உதவுவேன் என்று வாக்கு கொடுத்தேன்...'' என்று மனம் திறந்து பேசியவர் பாலிவுட்டின் மற்றுமொரு பிரபல நடிகர் சஞ்சய் தத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`90 சதவிகித பாலிவுட் பிரபலங்கள் போதை அடிமைகள்' என கமென்ட் அடித்தார் சர்ச்சை நாயகி கங்கனா ரணவத். அவரும் ஒரு காலத்தில் போதைக்கு அடிமையாகி, பிறகு அதிலிருந்து மீண்டவர் என அனுபவங்களை வீடியோவில் வெளிப்படையாகப் பேசி, பரபரப்பைக் கிளப்பினார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்
மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி? - நான் அடிமை இல்லை - 9

கடந்த வருடம் பாலிவுட்டின் இளம் ஹீரோ சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அங்கே போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்தாடும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. முன்னணி நட்சத்திரங்கள் பலரும் போதை மாஃபியாவில் இருக்கும் தகவல்கள் கசிந்தன. அந்த விசாரணைகளே இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. அதற்குள் ஷாருக்கான் மகன் விவகாரத்தின் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது பாலிவுட்டின் போதை பிசினஸ்.

போதைப் பழக்கத்துக்கும் அதன் அடிமைத்தனத்துக்கும் கோலிவுட்டும் கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல். வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளர், சர்ச்சைகளுக்குப் பெயர் போன இளம் ஹீரோ / ஹீரோயின்கள், முன்னணி மாடல்கள், சின்னத்திரை பிரபலங்கள் என இங்கேயும் போதை அடிமைகள் ஏராளம் என்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரத்தில். இவர்களில் பலரும் உலகின் அனைத்து போதைப் பொருள்களையும் பயன்படுத்தி, அந்த த்ரில் அனுபவங்களை முயற்சி செய்யும் வழக்கமுள்ளவர்கள்.

Party (Representational Image)
Party (Representational Image)
Image by bridgesward from Pixabay
மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! - நான் அடிமை இல்லை - 10

சென்னை, ஈசிஆரில் உள்ள பண்ணை வீடுகளில் வீக் எண்டுகளில் நடைபெறும் பார்ட்டிகளில்தான் இவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. இவர்கள் அத்தனை பேருக்கும் போதைப் பொருள்களை சப்ளை செய்யவென பிரத்யேகக் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் பெரிய, பணக்கார வீட்டுப் பிள்ளைகள். சாமானியனுக்கு 50 ரூபாய்க்கு கிடைக்கும் போதை மருந்தை, சினிமா பிரபலங்களும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளும் 500 ரூபாய்க்குக்கூட வாங்கத் தயாராக இருப்பதால், இவர்களது சப்ளை செயின் நான்ஸ்டாப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

மீடியாவில் வெளிச்சம் பெற இவர்கள் பார்ட்டி கலாசாரத்துக்குப் பழக வேண்டும். அங்கேதான் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் எனப் பெரும்புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். அவர்களுக்கான வாய்ப்புகளும் காத்திருக்கும். பார்ட்டி நடக்கும் வீட்டில் உணவு, மது கவுன்ட்டர்களைப் போலவே போதைப் பொருள்களுக்காகவும் பிரத்யேக கவுன்ட்டர் அமைக்கப்படும். `பவுடர்' என்பது போதையைக் குறிக்க அவர்கள் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Mishal Ibrahim on Unsplash
தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! - நான் அடிமை இல்லை 11

எல்லா பார்ட்டிகளிலும் எல்லோருக்கும் கொகைன் மாதிரியான போதைப் பொருள்கள் கிடைப்பதில்லை என்பதால் அது போன்ற தருணங்களில் அவர்கள் சிகரெட்டுக்குள் கஞ்சாவை ஸ்டஃப் செய்து உபயோகிப்பது சர்வசாதாரணமாக நடக்கும். இதில் ஆண், பெண் பேதமே இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால், அவர்களுக்கும் இந்தமுறையில் போதையை அனுபவிப்பது சுலபமாக இருக்கிறது.

அது சரி.... பெரிய இடத்துப் பிள்ளைகள் போதைக்குள் மூழ்குவதன் பின்னணி என்ன...? அடுத்த அத்தியாயத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு