Published:Updated:

Doctor Vikatan: சிசேரியனுக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்?

கர்ப்பிணி (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: சிசேரியனுக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
கர்ப்பிணி (Representational Image)

நான் இப்போது 8 மாத கர்ப்பம். இரட்டைக் குழந்தைகள் இருப்பதால் எனக்கு சிசேரியன் செய்ய வேண்டியிருக்கலாம் என்று முன்கூட்டியே மருத்துவர் சொல்லிவிட்டார். சிசேரியன் ஆனால் என் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்? சிசேரியன் ஏற்படுத்திய வலி பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு இருக்குமா? எத்தனை நாள்களில் நான் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்?

- கனிமொழி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த, மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``சிசேரியன் செய்யப்பட்ட முதல் இரண்டு, மூன்று நாள்களுக்கு வலி இருக்கலாம். அதற்காக உங்களுக்கு வலிநிவாரணிகள் கொடுப்பார்கள். நாள்கள் போகப் போக வலி படிப்படியாகக் குறையும். சிலர் ஆபரேஷன் ஏற்படுத்திய வலி தாங்க முடியவில்லை என்று படுக்கையைவிட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள். அப்படியில்லாமல் எழுந்து கழிவறை செல்வது, நடப்பது போன்றவை முக்கியம். சிசேரியன் ஆன தினமே உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

கர்ப்பப்பை நன்கு சுருங்கிவிட்டது, தாய்ப்பால் நன்கு சுரக்கிறது, வேறு பிரச்னைகள் இல்லை, அதிக ப்ளீடிங் இல்லை, குழந்தைகளுக்கும் பிரச்னைகள் இல்லை என்றால் சிசேரியன் ஆன மூன்றாவது நாள் உங்களை டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனாலும் உங்களுக்கு ப்ளீடிங் இருக்கலாம். அது ஒருநாளைக்கு 2 அல்லது 3 நாப்கின் மாற்றும் அளவுக்கு இருக்கலாம். அதிகபட்சமாக ஒரு மாதம் வரை ப்ளீடிங் இருக்கலாம். அளவுக்கதிக ப்ளீடிங் இருந்தாலோ, கட்டிக்கட்டியாக ப்ளீடிங் ஆனாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுவை சிகிச்சை செய்து தையல் போட்ட இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உணவு விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதால், கர்ப்ப காலத்தைவிட பிரசவத்துக்குப் பிறகு உங்களுக்கு அதிக கலோரிகள் தேவைப்படும். கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு என எல்லாம் கலந்த சரிவிகித உணவு முக்கியம்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நீர்ச்சத்து இழப்பு இருக்கும். அதை ஈடுகட்ட தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் மார்பகங்களில் ஏற்படும் எரிச்சல், வெடிப்பு, வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவர் அல்லது தாய்ப்பால் ஆலோசகரிடம் பேசி சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Pregnant lady (Representational Image)
Pregnant lady (Representational Image)

பிரசவமான முதல் 4- 6 வாரங்களுக்கு அதிக எடை தூக்குவதைத் தவிர்க்கவும். 6 வாரங்களுக்கு கடுமையான எந்த உடற்பயிற்சியையும் செய்யாமல், வாக்கிங் மாதிரியான மிதமான பயிற்சிகளை மட்டும் செய்யவும். ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் என்பதால் அவர்களைப் பார்த்துக்கொள்வதில் உங்கள் குடும்பத்தாரின் சப்போர்ட் மிக முக்கியம். எனவே அவர்களின் உதவியோடு போதிய தூக்கம், ஓய்வு இரண்டையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 6 வாரங்கள் வரை உங்களையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதைத் தாண்டி வேறு எந்த வேலைகளையும் செய்யாமலிருப்பதே நல்லது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism