Published:Updated:

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

முட்டை

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
முட்டை

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? உணவுக்கு பதிலாக ஒன்றிரண்டு முட்டைகளைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாமா? பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?

- தீபக் (விகடன் இணையத்திலிருந்து

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும் அற்புத உணவுகளில் முட்டை முக்கியமானது. இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆகச்சிறந்த புரத உணவாகச் சொல்லப்படுகிறது. இது முழுமையான புரத உணவு என்பதால் மற்ற எந்த உணவிலுள்ள புரதத்தையும் முட்டையின் புரதத்தோடுதான் ஒப்பிடுவார்கள். எளிதில் செரிமானமாகக் கூடியது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது. லூட்டின் மற்றும் ஸியோஸாந்தின் என பிரதானமான இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகள் முட்டையில் உள்ளன. வயதானவர்களுக்கு ஏற்படும் மேகுலர் டீஜெனரேஷன் பிரச்னையால் பார்வை தொடர்பான பாதிப்புகள் வரும். அதற்கு இந்த இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் மிகவும் அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பிறகுதான் முட்டை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை செரிக்கும் தன்மை சீராக இருக்கும். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது நல்லதல்ல. பச்சையாகச் சாப்பிடுவதால் இன்ஃபெக்ஷன் வரலாம், கூடவே செரிமான பிரச்னையும் வரலாம். உணவு ஒவ்வாமையும் வரலாம். பச்சையாகச் சாப்பிட்டால் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தும்மல், வீஸிங் பிரச்னைகளும் வரலாம். சிலர் பாலுடன் முட்டையை அடித்துக் குடிப்பார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் பயோட்டின் சத்துக் குறைபாடும், சருமப் பிரச்னைகளும் வர வாய்ப்புண்டு. எனவே, சமைத்த முட்டையை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது. வேக வைத்தது, ஆம்லட், புர்ஜி, தோசை என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். முட்டையில் கலோரி குறைவு என்பதால் பயமின்றி எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம். பெரியவர்கள், கொலஸ்ட்ரால் இருக்கும் பட்சத்தில் வாரத்தில் 3 நாள்களுக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம். புரதத் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று வெள்ளைக் கரு கூட எடுத்துக்கொள்ளலாம்.

Eggs
Eggs

சாப்பாட்டுக்குப் பதிலாக இரண்டு, மூன்று முட்டை சாப்பிடுவது சரியா எனக் கேட்டிருக்கிறீர்கள். கார்போஹைட்ரேட்டே இல்லாமல் வெறும் புரதம் மட்டுமே நிரம்பிய முட்டையை உணவாக எடுத்துக்கொள்வது சரியானதல்ல. ஒருவேளை உணவுக்குப் பதிலாக வெறும் முட்டை மட்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சாப்பிட வேண்டும் என்றால் அத்துடன் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?