Published:Updated:

`14 மணி நேரத்தில் கொரோனா அழிந்துவிடுமா..!' -மருத்துவர்கள் சொல்வதென்ன? #FactCheck

14 மணி நேரத்தில் கொரோனா அழிந்துவிடுமா..?
14 மணி நேரத்தில் கொரோனா அழிந்துவிடுமா..?

சுய ஊரடங்கைக் கடைப்பிடித்தால் கொரோனா அழிந்துவிடுமா?

14 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்ற தவறான தகவலுக்கு உரிய விளக்கமளிக்கும் ஒரு இன்ட்ராக்டிவ் பதிவு கீழே...

கொரோனா பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்கப்பட வேண்டி, நாளை (22/03/2020) ஒருநாள் மட்டும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை, 14 மணி நேரத்துக்கு பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பந்த்
பந்த்
Twitter

அதைத் தொடர்ந்து, மோடியின் இந்த `14 மணி நேர ஊரடங்கு' கணக்கு, கொரோனாவை `ஒரே நாளில் நாட்டைவிட்டே ஒழிக்கும் நோக்கில் சொல்லப்பட்ட விஷயம்' எனக்கூறி நேற்றிலிருந்து வலம் வரத்தொடங்கிவிட்டனர் நம் வாட்ஸ்-அப் போராளிகள். சொல்லிவைத்தாற்போல அவர்கள் எல்லோரும் சொல்லும் விஷயம் ஒன்றுதான்.

`90 சதவிகித ஏற்றுமதி, இறக்குமதி  பாதிப்பு!’ -கொரோனா அச்சத்தால் திணறும் தூத்துக்குடி துறைமுகம்

அது - `கொரோனா வைரஸ், தரைத்தளங்களிலிருந்து அழிய 14 மணி நேரம் போதும். நாம் அனைவரும் 14 மணி நேரம் பொது வெளிகளில் நடமாடாமல் இருந்தால், பொது வெளி தரைத்தளங்களில் தங்கியிருக்கும் கொரோனா வைரஸ் கூட்டம் தாமாகவே அழிந்துவிடும். இந்தக் கணக்கை அடிப்படையாக வைத்தே மோடி ஊரடங்கு நேரத்தைப் பிறப்பித்துள்ளார்'. இந்தக் கருத்தைக் கூறிய ஒருசிலர், தங்களை மருத்துவரென முன்னிறுத்தியே விஷயத்தைப் பகிர்வதால், பலரும் இந்தத் தகவல்களை நம்பிவிடும் சூழல் இருக்கிறது.

ஆகவே, இதன் உண்மைநிலையைக் கண்டறிய வேண்டி, தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூரைத் தொடர்புகொண்டு விகடன் சார்பாகப் பேசினோம்.

தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்

``இது தவறான தகவல். எல்லாப் பொருள்களிலும் ஒரே நேர இடைவெளிக்குள் வைரஸ் அழிந்துவிடாது. பொருள்களின் தன்மையைப் பொறுத்து, இந்தக் கால அளவு நிச்சயமாக மாறும். சில பொருள்களில் சில மணி நேரத்தில் அழியலாம். சிலவற்றில், நான்கு - ஐந்து நாள்கள்கூட தங்கியிருக்கலாம்.

கொரோனா வைரஸ்  வாழும் காலம்
கொரோனா வைரஸ் வாழும் காலம்
`கொரோனா அலட்சியத்தின் விளைவு; ஊரடங்கிய பிரான்ஸ்!' - வாசகரின் நேரடி அனுபவம் #MyVikatan
ஆகவே, ஞாயிறுகிழமை காலை முதல் இரவு வரை வீட்டுக்குள் இருந்துவிட்டு, மறுநாள் காலை வெளியே வரும்போது இந்தியா முழுக்க வைரஸ் அழிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு யாரும் இருக்க வேண்டாம்.

இந்த நம்பிக்கை, வைரஸ் மீதான அலட்சியத்துக்கும் வழிவகுக்கலாம் என்பதால், கருத்து சொல்பவர்கள் அனைவரும் தயவுசெய்து கவனமாக இருங்கள். கடமையுணர்வோடு இருங்கள்" என்றார் அவர்.

இன்னும் சில மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் நம்மிடயே அழுத்திச் சொன்னது - ``பிரதமரின் இந்த ஒரு நாள் ஊரடங்கு வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், இது கொரோனாவை அழிக்கவேண்டி அறிவுறுத்தப்பட்ட ஊரடங்கு அல்ல. ஒரே ஒருநாளிலெல்லாம் கொரோனா தொற்றை முழுமையாகத் தடுத்துவிடுவதென்பது முடியாது" என்பதுதான்.

ஆகவே மக்களே, வதந்திகளைப் பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள். பொறுப்போடு இருப்போம்.
அடுத்த கட்டுரைக்கு