Published:Updated:

World Radiology Day: `ஆசியாவின் முதல் X-ray கருவி நிறுவப்பட்டது சென்னையில்தான்!' - சுவாரஸ்ய வரலாறு

முதல் மருத்துவ எக்ஸ்ரே படம் என்பது டிசம்பர் 22-ம் தேதி 1895-ம் ஆண்டு பேராசிரியர் வில்ஹெம்மின் மனைவியின் கையில் எடுக்கப்பட்டது. மோதிரத்துடன்கூடிய விரலை எக்ஸ்ரே படமாக எடுத்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் விரைவாகப் பரவியது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் உலகப் பந்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி யிருக்கின்றன. அந்த வகையில் மருத்துவத் துறையில் கதிரியக்கவியலின் பங்கு மிகவும் பெரியது. கணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஆதாரத்தை உருவாக்கிக் கொடுத்தது எக்ஸ்ரே கருவியின் வருகை. 18-ம் நூற்றாண்டில் அது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சி என்பது இன்றைய மருத்துவ உலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

X Ray (Representational Image)
X Ray (Representational Image)
Image by Nicholas Warrilow from Pixabay

சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகைத் தன் பிடியில் வைத்திருருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதிலும் கதிரியக்கவியல் மாபெரும் பங்காற்றியுள்ளது. இதுபற்றிப் பேசிய ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறைத் தலைவர் பி.சுஹாசினி, ``ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் வில்ஹெம் ரான்ட்ஜன் என்பவரால் 1895-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எக்ஸ் ஊடுகதிர் (X-ray) கண்டறியப்பட்டது.

முதல் மருத்துவ எக்ஸ்ரே படம் என்பது டிசம்பர் 22-ம் தேதி 1895-ம் ஆண்டு பேராசிரியர் வில்ஹெம்மின் மனைவியின் கையில் எடுக்கப்பட்டது. மோதிரத்துடன்கூடிய விரலை எக்ஸ்ரே படமாக எடுத்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் விரைவாகப் பரவியது. அடுத்த ஓராண்டுக்குள் ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிக் குண்டு காயங்கள், எலும்பு முறிவுகள், சிறுநீரகக் கற்கள், தவறுதலாக விழுங்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

Dr.Suhasini
Dr.Suhasini

மருத்துவ உலகில் இந்தத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் 1900-ம் ஆண்டு, ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் எக்ஸ்ரே கருவி நிறுவப்பட்டது. 1930 மற்றும் 1940-களில் காலணிக் கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களின் பாத எலும்புகளைக் காண வேண்டும் என்பதற்காக எக்ஸ்ரே படம் எடுத்து வழங்கின. தொடர்ந்து முழு உடலின் எக்ஸ்ரே படமும் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவீன மருத்துவத்தில் கதிரியக்கவியலின் பங்கை ஊக்கப்படுத்தும் வகையில் எக்ஸ்ரே தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் உலக கதிரியக்கவியல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. எக்ஸ்ரேவைத் தொடர்ந்து தற்போதைய சிடி ஸ்கேன் தொழில்நுட்பம் வரை அனைத்தும் கதிரியக்கவியல் துறையின் முன்னேற்றங்களே.

X Ray (Representational Image)
X Ray (Representational Image)
Image by mohamed Hassan from Pixabay
பிசிஆர், ஆன்டிபாடி, ஆன்டிஜென், சிடி ஸ்கேன்... கொரோனா பரிசோதனைகள் FAQ!

கோவிட் பெருந்தொற்றுப் பரவலில் கதிரியக்கவியல் துறையின் பங்கு அளப்பரியது. நோயைக் கண்டறிவதிலும் நோயின் தன்மையைப் பின்தொடர்வதிலும் கதிரியக்கவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டு இரண்டு நாள்களுக்கும் குறைவான நிலையில் எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியும் திறன் 55%. அறிகுறி தென்பட்டு 11 நாள்களில் 79%-ஆக அதிகரிக்கிறது. நெஞ்சகப் பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்ரே, பெரிய அளவிலான பாதிப்புகளைக் கண்டறியும். ஆரம்ப நிலை நோய் பாதிப்பைக் கண்டறிய பயன்படவில்லை.

POCUS எனப்படும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு அவர்களது படுக்கையின் அருகில் வைத்து மட்டுமே எடுக்கப்படும். இதனால் பிற பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது.

சிடி ஸ்கேன்:

வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் கதிரியக்கவியலின் நவீன தொழில்நுட்பமான சி.டி ஸ்கேன், கோவிட்-19 காலத்தில் முக்கியத்துவம் அடைந்தது. நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கும், நோயின் தன்மையைக் குறைந்த, மிதமான, தீவிர பாதிப்பு என வகைப்படுத்தி, சிகிச்சையைப் பின்தொடர்வதற்கும் சி.டி ஸ்கேன் பயனுள்ளதாக உள்ளது.

Dr.jayanthi
Dr.jayanthi

கோவிட் தொற்றுக்காக எடுக்கப்படும் சி.டி ஸ்கேன் பரிசோதனை முடிவுகளில் நோயின் தீவிரத்தைக் குறிக்கும் எண்கள் வழங்கப்படுகின்றன. இதை வைத்து நோயின் தன்மையை இன்னும் துல்லியமாகக் கணித்து சிகிச்சையளிக்க முடிகிறது.

சி.டி ஸ்கேன் பரிசோதனையில் நோய் கண்டறியும் திறன் 90% துல்லியமாகவும் துரிதமாகவும் இருக்கும்" என்றார் அவர்.

இதுபற்றிப் பேசிய ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயந்தி, ``அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டதற்குப் பிறகு, கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட சி.டி ஸ்கேன் பரிசோதனைகளும் 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

CT Scan
CT Scan
சி.டி ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர்... கொரோனாவைக் கண்டறிய சிறந்த பரிசோதனை எது? #ExpertOpinion

கொரோனா காலத்தில் எங்கள் மருத்துவமனை மேற்கொண்ட பணிகளுக்காக CAHO என்ற சர்வதேச அமைப்பு வழங்கும் சிறந்த மருத்துவமனைக்கான விருது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு