Published:Updated:

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை; ஒத்துழைக்காத உடல்; தீர்வுகள் உண்டா?

Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை; ஒத்துழைக்காத உடல்; தீர்வுகள் உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )

நான் கடந்த 6 மாதங்களாக நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். இது எனக்குப் புதிது என்பதால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. எப்போதும் களைப்பாக, உடல்வலியோடு இருப்பதாக உணர்கிறேன். நைட் ஷிஃப்ட்டுக்கு என் உடல் பழகவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?

- மனிஷா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.

``நம் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதை ரஜினி பட பாடல் மாதிரி `எட்டு எட்டாக' மூன்றாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரவில் 12 மணி நேரம் ஓய்வெடுக்கவும் பகலில் 12 மணி நேரம் வேலைசெய்யவும் ஏதுவாகத்தான் இயற்கையே நம் உடலை வடிவமைத்திருக்கிறது.

நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர் என்றால் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட். நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர். அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டியதில்லை. அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டிவி பார்க்க, போன் பேச, வேறு வேலைகளைப் பார்க்கவெல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஆரோக்கியத்தை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமான நேரம் தூங்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவயதிலேயே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

6 முதல் 8 மணிநேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும். உடல் ஓய்வெடுத்துக்கொள்ளும்.

பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பகல்தான் உங்களுக்கு இரவு என்பதால் பகலிலும் மீண்டும் சாப்பிடாதீர்கள்.

Office (Representational Image)
Office (Representational Image)
Pixabay

சரியாகத் தூங்காமலும் இரவில் மட்டுமன்றி பகலிலும் சாப்பிடுவதாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கிய மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் உங்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?