Published:Updated:

Covid Questions: ஒரே மாதிரியான அறிகுறிகள்; டெங்குவா, கொரோனாவா என எப்படித் தெரிந்துகொள்வது?

Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: ஒரே மாதிரியான அறிகுறிகள்; டெங்குவா, கொரோனாவா என எப்படித் தெரிந்துகொள்வது?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகச் செய்திகளைக் கேள்விப்படுகிறோம். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? ஒரே நேரத்தில் இந்த இரண்டு தொற்றுகளும் ஒருவரை பாதிக்க வாய்ப்பிருக்கிறதா?

- வினோத் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``வாசனை மற்றும் சுவைகளை அறியும் திறனை இழப்பது, சுவாசத் தொந்தரவுகள் ஆகியவை கோவிட் தொற்றில் மட்டும் காணப்படுகிற பிரத்யேக அறிகுறிகள். உடல்வலி, மூட்டுவலி போன்றவை கோவிட் தொற்றிலும், டெங்கு தொற்றிலும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனாலும் டெங்கு தொற்றில் இவை சற்று அதிகம் காணப்படும். பிளேட்லெட் எனப்படும் தட்டணுக்கள் குறைவது டெங்குவின் அறிகுறி. கோவிட் தொற்று மற்றும் டெங்கு தொற்று இரண்டிலுமே வெள்ளை அணுக்களின் அளவு மிகக் குறைவாக இருக்கும். கல்லீரலின் செயல்பாடு அசாதாரணமாக இருக்கும்.

டெங்கு - கொரோனா வேறுபாடு
டெங்கு - கொரோனா வேறுபாடு

நீங்கள் சந்தேகப்படுகிற மாதிரி கோவிட், டெங்கு என இரண்டு தொற்றுகளுமே ஒருவரை ஒரே நேரத்தில் பாதிக்கலாம். எனவே கோவிட் பாசிட்டிவ் என்று வந்தாலும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது, சரும அலர்ஜி, ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளும் இருந்தால் அது டெங்குவாகவும் இருக்குமோ என்றும் சந்தேகிக்கலாம். இந்த பதிலுடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியல் எவையெல்லாம் கொரோனா அறிகுறிகள், எவை டெங்கு அறிகுறிகள் என்பதைத் தெளிவாக விளக்கும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!