Published:Updated:

Covid Questions: அடிக்கடி தும்மல், இருமல்; கொரோனாவா, சாதாரண அலர்ஜியா எனக் கண்டுபிடிப்பது எப்படி?

Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: அடிக்கடி தும்மல், இருமல்; கொரோனாவா, சாதாரண அலர்ஜியா எனக் கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

எனக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். தும்மல், இருமல் இருக்கும். கொரோனாவின் இரண்டாவது அலையில் ஏழெட்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்திருக்கிறேன். இந்நிலையில் இப்போது மீண்டும் அடிக்கடி தொண்டைக் கரகரப்பும், தும்மலும், மூக்கடைப்பும் வருகின்றன. சாதாரண ஜலதோஷமா.... கொரோனாவா என எப்படிக் கண்டுபிடிப்பது? லேசாக தும்மினாலே அருகிலுள்ளவர்கள் விலகிச் செல்வது தர்மசங்கடத்தைத் தருகிறது.

- குமரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``தமிழ்நாடு போன்ற காற்று மாசும், கடலோர சீதோஷ்ண மாற்றங்களும் அதிகமுள்ள இடங்களில் இது மிக முக்கியமான பிரச்னையாகவே இருக்கிறது. இதனால் நிறைய மக்களுக்கு அலர்ஜிக் ரைனட்டிஸ் (Allergic rhinitis) எனப்படுகிற ஒவ்வாமை பிரச்னை இருக்கிறது. தூசு, புகை, பூக்களில் உள்ள மகரந்தங்கள், செல்லப்பிராணிகளின் ரோமங்கள், இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது போன்று இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் எப்போதும் இருக்கும். அவற்றை கோவிட் அறிகுறிகளிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று கேட்டிருக்கிறீர்கள். வழக்கமாக நீங்கள் சந்திக்கும் அலர்ஜி அறிகுறிகள் எப்படியிருக்கும், எத்தனை நாள்களில் சரியாகும் என்பது உங்களுக்கே தெரியும். கோவிட் அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களால் வித்தியாசத்தை உணர முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடல்வலி, உடனடியாக உடல் பலவீனமாவது, காய்ச்சல், தீவிர, தொடர் காய்ச்சல் என அது அடுத்தடுத்த நிலைகளுக்குப் போவதாக உணர்ந்தால் அது கோவிட் தொற்றாக இருக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாதாரண தும்மல், தொண்டைக் கரகரப்பு, மூக்கில் சளி வடிதல் போன்றவை அலர்ஜியால் வந்தவையாகவோ அல்லது அப்பர் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன் (Upper Respiratory Infection (URI) எனப்படும் மேல் சுவாசக்குழாய் தொற்றின் பாதிப்பாகவோ இருக்கலாம். நான் குறிப்பிட்டதுபோல உங்கள் அறிகுறிகள் அடுத்தடுத்த நிலைகளுக்குப் போனால் தாமதிக்காமல் கோவிட் டெஸ்ட் செய்து பார்த்துவிடுவது பாதுகாப்பானது. இல்லாவிட்டால் ஆவி பிடிப்பது, தூசு, புகை இல்லாத இடங்களில் இருப்பது போன்றவற்றைப் பின்பற்றினாலே போதும்.

Cold (Representational Image)
Cold (Representational Image)
Pixabay

தும்மினாலோ, இருமினாலோ அந்த நபரை வித்தியாசமாகப் பார்க்கும் சமூகப் பார்வை இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. முன்பு டிபி எனப்படும் காசநோய் அதிகமிருந்த காலத்தில் இப்படிப்பட்ட மனநிலை மக்களிடம் இருந்தது. இருமினாலே `டிபியா...?' என கேட்பார்கள். இப்போது `கொரோனாவா...' என்று கேட்கிறார்கள். இது நாளடைவில் மாறிவிடும். தமிழக அரசு 44 சதவிகித மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 12 சதவிகித மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு முடித்துவிட்டது. மூன்றாவது அலையின் தாக்கமும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மக்கள் அதைப் பற்றி பெரிதாகப் பேசமாட்டார்கள். கவலைப்பட வேண்டாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism