Published:Updated:

How to: கோவிட் தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோடு செய்வது எப்படி?

Covid vaccine certificate
News
Covid vaccine certificate

பயணங்கள் முதல் மால்கள் வரை என பொது இடங்களுக்குச் செல்ல, மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை மிக எளிதாக ஆரோக்கிய சேது செயலி, வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இரண்டு வருடத்திற்கு மேலாக உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா பரவலைக் குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல நாடுகளிலும் கோவிட் - 19 வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி முகாம்கள் முதல் மருத்துவமனைகள் வரை தினமும் பல ஆயிரம் மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சில மாநில அரசுகள், பொதுவிடங்களில் மக்கள் அனுமதிக்கப்பட, அவர்கள் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை கட்டாயமாக்கிவருகின்றன.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது கொரோனாவின் ஒமிக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் பயணங்கள் முதல் மால்கள் வரை என பொது இடங்களுக்குச் செல்ல, மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை மிக எளிதாக ஆரோக்கிய சேது செயலி, வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.

கோவிட் - 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்டெப் 1:

CoWIN இணையதளத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு எண், உங்கள் WhatsApp எண்ணாக இருக்க வேண்டும். முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு `ஹாய்' என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும். அதிகாரபூர்வ MyGov கொரோனா உதவி மையமான இது, 30 வினாடிகளுக்குள் சான்றிதழை பதிவிறக்க வழிகாட்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்டெப் 2:

நீங்கள் அந்த செய்தியை அனுப்பியதும், கொரோனா வைரஸ் தொடர்பான தலைப்புகளின் பட்டியலை சாட்பாட் (chatbot) காண்பிக்கும். அந்தப் பட்டியலில் `சான்றிதழை பதிவிறக்க' (Download Certificate) என்ற ஆப்ஷனும் இருக்கும். அதற்கு, நாம் `2' என்ற எண்ணை மெசேஜ் அனுப்ப வேண்டும்.

ஸ்டேப் 3:

சாட்பாட், தடுப்பூசி தொடர்பான தேர்வுகளை மீண்டும் காண்பிக்கும். அதனை படித்து பின் அதற்குரிய எண்களை நீங்கள் அனுப்ப வேண்டும். 2 என்ற எண்ணை அனுப்பவதன் மூலம், CoWIN தளத்திலிருந்து உங்கள் தடுப்பூசி சான்றிதழ் கோரப்படும். தொடர்ந்து உங்களுடைய அதிகாரபூர்வ எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்த பின்னர், CoWIN இயங்குதளத்தில் இருந்து தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும். இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo/Mahesh Kumar A

CoWIN இணையதளத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு எண், உங்கள் WhatsApp எண்ணிலிருந்து வேறுபட்டால், உங்களுக்கு OTP கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயனர்கள் அரசாங்கத்தின் ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்தி சான்றிதழைப் பதிவிறக்கலாம். இதற்கு 60 வினாடிகளுக்கும் குறைவான நேரமே ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருவேளை உங்களுடைய தொலைபேசி எண், ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் தொடர்பு எண்ணாக coWIN இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், OTP பெற, அந்த எண்ணுடன் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் அனைத்தையும் சாட்பாட் உங்களுக்குக் காண்பிக்கும். அவற்றில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுத்து அதனை திருப்பி அனுப்பும்பட்சத்தில் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆரோக்யா சேது செயலியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்குவது?

ஸ்டெப் 1:

உங்கள் ஸ்மார்ட்போனில் ஆரோக்யா சேது ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின் செயலியின் உள்ளே சென்று CoWIN டேப்க்கு (Tab) செல்லவும். சில நிமிடங்கள் இந்தச் செயல்முறையை தொடரவில்லை எனில், மீண்டும் உள்நுழையும்படி கேட்கப்படுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Cowin இணையதளம்
Cowin இணையதளம்

ஸ்டெப் 2:

`Vaccine certificate' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3:

அடுத்ததாக தடுப்பூசி பதிவின்போது உங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் ஐடியை (Beneficiary reference ID) உள்ளீடு செய்யவும்.

ஸ்டெப் 4:

`get certificate' என்பதை தேர்ந்தெடுக்கவும். தடுப்பூசி சான்றிதழின் PDF-ஐ செயலி உங்களுக்கு வழங்கும்.