Published:Updated:

Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?

Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

பலருக்கும் எடையை எப்படிக் குறைப்பது என்பது பிரச்னை என்றால் எனக்கோ எப்படி எடையைக் கூட்டுவது என்பது பிரச்னை. வயது 23. மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை அதிகரிக்கவில்லை. அதிக செலவில்லாமல் எடையைக் கூட்டும் வழிகள் உண்டா?

- மைதிலி (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``நீங்கள் நன்றாகச் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். ஆனாலும், சாப்பாட்டின் சத்து ஏன் உடலில் சேரவில்லை என்பதை முதலில் ஆராய வேண்டும். உங்களுக்கு ரத்தச்சோகை உள்ளதா, வேறு ஏதேனும் சத்துக்குறைபாடு உள்ளதா, மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதா, எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது, நாக்குப்பூச்சி பிரச்னை இருக்கிறதா, மலச்சிக்கல் உள்ளதா என்ற விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எளிய விஷயங்களின் மூலம் உங்கள் உணவின் சத்துகளை அதிகரிக்கச் செய்ய முடியும். சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் கெட்டித்தயிர் அல்லது பால் சேர்த்துப் பிசைந்து செய்து சாப்பிடலாம். பாதாம், முந்திரி, அக்ரூட் போன்றவற்றைத் தினமும் 10 - 12 என்ற எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால் வேர்க்கடலை உருண்டை அல்லது எள்ளுருண்டை 5 - 6 எடுத்துக்கொள்ளலாம். கண்டென்ஸ்டு மில்க்கும், 2 டீஸ்பூன் பாதாம் பவுடரும் சேர்த்து மில்க்ஷேக் செய்து குடிக்கலாம்.

பழங்கள்
பழங்கள்
Image by silviarita from Pixabay

பால், வெல்லம் சேர்த்த சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை வாரம் நான்குமுறை எடுத்துக்கொள்ளலாம். ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற கடலை வகைகளை வாரத்தில் நான்கு நாள்களுக்குச் சேர்த்துக்கொள்ளலாம்.

சீஸனுக்கேற்ற பழங்களைத் தினம் ஒரு கப் சாப்பிடலாம். முட்டை சாப்பிடுபவர் என்றால் தினமும் 2 எடுத்துக்கொள்ளலாம். தினமும் அரைமணி நேரம் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது, பசியைத் தூண்டும் என்பதால் நன்றாகச் சாப்பிடவும் உதவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?