Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் வாய்ப்புண்; நிரந்தர தீர்வே கிடையாதா?

Mouth ulcers (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் வாய்ப்புண்; நிரந்தர தீர்வே கிடையாதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Mouth ulcers (Representational Image)

என் கணவருக்கு 15 நாள்களுக்கொரு முறை வாய்ப்புண் வரும். இப்போது என் 12 வயது மகனுக்கும் அதே போல வருகிறது. ஒவ்வொரு முறையும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை கொடுக்கிறேன். இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா?

- ரகுமான் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

ஆப்தஸ் அல்சர் (Aphthous ulcers) எனப்படும் வாய்ப்புண் பதினைந்து நாள்களுக்கொரு முறை வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கலாம். முதலில் உங்கள் கணவரின் வாய் சுகாதாரம் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். சிலர் பிரஷ் செய்யும் முறையாலும், சிலரது பல் வரிசையாலும்கூட வாய்ப்புண் வரலாம். பேசும்போதும், சாப்பிடும்போதும் பற்களும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பதால் உராய்வு ஏற்பட்டு, வாய்ப்புண்களை ஏற்படுத்தலாம்.

அடுத்ததாக ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான ஒரு காரணம். குறிப்பாக வைட்டமின் ஏ, பி மற்றும் சி சத்துக் குறைபாடுகள் இருந்தால் அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்றாவதாக... நம் உணவுப் பழக்கம். வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது, சூடாக குடிப்பது, எண்ணெய்ப் பண்டங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட சிட்ரஸ் வகை பழங்களை அதிகம் சாப்பிடுவது போன்றவற்றாலும் வாய்ப்புண்கள் வரலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் மகனின் வாய் சுகாதாரத்தைச் சரிபாருங்கள். அவனுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா என பாருங்கள். பிரச்னை வரும்போது மாத்திரை கொடுப்பது தீர்வாகாது. தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம். அதில் அபரிமிதமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேபோல தினமும் ஒரு பழம் சாப்பிடப் பழக்குங்கள். வாய் சுத்தம் பேணுவது அவசியம். காலையும் இரவும் பல் துலக்க வேண்டும். பல் மருத்துவரை அணுகி, பற்களைப் பரிசோதிப்பதும் அவசியம். கூரான பற்கள் இருந்து அவற்றால் உராய்வு ஏற்பட்டு அதனால் புண் ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும்.

Representational image
Representational image
Photo by Nsey Benajah on Unsplash

கணவருக்கும் மகனுக்கும் இதே பிரச்னை இருப்பதால் `க்ரான்ஸ் டிசீஸ்' (Crohn's disease) எனப்படும் ஆட்டோஇம்யூன் பிரச்னை இருக்கிறதா என்றும் பரிசோதிப்பது அவசியம். இதனால் வயிறு, வாய், ஆசனவாய் என எல்லா இடங்களிலும் புண்கள் ஏற்படலாம். அரிதான பாதிப்பு என்றாலும் ஒருமுறை செக் செய்துவிடுவது பாதுகாப்பானது.

கணவருக்குப் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால் தவிர்க்கச் சொல்லுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism