Published:Updated:

Doctor Vikatan: தொற்றிலிருந்து குணமான பிறகும் நார்மலாகாத உடல்; ஏன் இப்படி?

Covid 19 Outbreak (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: தொற்றிலிருந்து குணமான பிறகும் நார்மலாகாத உடல்; ஏன் இப்படி?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Covid 19 Outbreak (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகும், முழுமையான குணம் அடைந்ததுபோல தெரியவில்லை. அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் தென்படுகின்றன. தொண்டையில் ஒருவிதமான உறுத்தல், லேசான தலைவலி, அவ்வப்போது வறட்டு இருமல், சளி, அவ்வப்போது தும்மல் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னைகள் சின்னதாகவோ... பெரிதாகவோ தொடர்கின்றன. மேலும் ஜுரத்தில் இருந்து மீண்டபிறகு ஒரு மாதிரியான உணர்வு சில நாள்களுக்கு நீடிக்கும். அத்தகைய உணர்வு பலநாள்களுக்கும் நீடிப்பதும் நடக்கிறது. இவையெல்லாமே 20 நாள்களுக்கும் மேலாக நீடிக்கின்றன. இது எதனால், பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?

- பிரவீன் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி
டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``சார்ஸ் கோவ் 2 எனும் வைரஸ் கிருமியால் பரவுவது கோவிட் நோய் என்பதை நாம் அறிவோம். இந்த வைரஸ் உடலில் தொற்றியதும் காய்ச்சல், சளி, தொண்டைவலி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரலில் சளி போன்ற பாதிப்புகள் வரலாம். 80 முதல் 85 சதவிகித நோயாளிகளுக்கு இத்தகைய அறிகுறிகள்தான் இருக்கும். குறைந்த அளவிலான நோய் பாதிப்பாக இது கணக்கிடப்படும். மீதி 15 சதவிகித நோயாளிகளுக்கு இந்த நோய் மிதமாகவோ, தீவிரமாகவோ இருக்கலாம்.

வயதானவர்களுக்கும், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் நோயின் தீவிரம் அதிகமிருக்கும். கோவிட் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி உடலில் நுழைந்ததும் சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் புரதங்களைத் தூண்டி சுரக்க வைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த சைட்டோகைன்கள் உடல் உறுப்புகளைப் பாதிக்கலாம். அதன் விளைவாகவும் நோய்த்தொற்றானது மிதமாகவோ, தீவிரமாகவோ இருக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிதமான தொற்றிலிருந்து குணமானவர்களுக்குமே அதன் பிறகு உடல்வலி, களைப்பு, சுவையும் மணமும் உணரும் திறன் முற்றிலும் பழைய நிலைக்குத் திரும்பாதது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் தொடரலாம். `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' எனப்படும் இது, எல்லோருக்கும் வரும் என்றில்லை. வயதானவர்கள் மற்றும் இணைநோய்கள் உள்ளவர்களுக்கு வரலாம்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

எனவே, கோவிட் தொற்றின் போதான அறிகுறிகளும் சரி, குணமான பிறகு தொடரும் அறிகுறிகளும் சரி, எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை. நபருக்கு நபர் மாறலாம். எப்படியிருப்பினும் உங்களுடைய அறிகுறிகளுக்கேற்ப, மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம் பாதிப்புகளை அலட்சியப்படுத்தாமல் அதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது பாதுகாப்பானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism