Published:Updated:

Covid Questions: மாஸ்க் அணிந்தாலே கண்கள் வறண்டுபோகின்றன; என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
A man with mask (representational image)
A man with mask (representational image) ( Image by Julián Amé from Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொடர்ச்சியாக மாஸ்க் அணிவதற்கும் கண்கள் வறண்டு போவதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? இதற்கு என்ன தீர்வு?

- ஜோசப் (விகடன் இணையத்திலிருந்து)

சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்
சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

``உங்கள் சந்தேகம் உண்மைதான். இந்தப் பிரச்னை `மாஸ்க் அசோசியேட்டடு டிரை ஐ' (Mask Associated Dry Eye (MADE) என்று குறிப்பிடப்படுகிறது. இப்போதைய சூழலில் இன்னும் சில மாதங்களுக்கு, ஏன் வருடங்களுக்குக் கூட மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்நிலையில் முகக்கவசத்தைச் சரியாக அணிய வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற பிரச்னைகள் உணர்த்துகின்றன.

அதாவது பலரும் முகக்கவசத்தை முறையாக அணிவதில்லை. மூக்குக்கு கீழே இறக்கியோ, தாடையில் இருக்கும்படியோ அணிகிறார்கள். முகக்கவசமானது வாயையும் மூக்கையும் முழுமையாக மூடும்படி சரியாகப் பொருந்தியிருக்க வேண்டியது முக்கியம். அப்படியில்லாமல் லூஸாக இருக்கும்போது நம்முடைய மூச்சுக்காற்றானது மாஸ்க்கின் மேல்பக்கமுள்ள இடைவெளி வழியே வெளியேறி, திறந்திருக்கும் கண்களைச் சென்றடையும்.

Covid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி?

அதன் விளைவாக கண்களுக்குள் இருக்கும் கண்ணீர்ப்படலமானது சீக்கிரமே ஆவியாகி, கண்கள் வறண்டு போகின்றன.

கம்ப்யூட்டரை பார்த்தபடி நீண்ட நேரம் வேலை செய்கிறவர்களுக்கு `கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்ற பிரச்னை ஏற்படுவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல ஏசி அறையில் ஏசி காற்று நேரடியாகப் படும்படி உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் ஏசி காற்று பட்டு கண்கள் வறண்டு போகும். `மாஸ்க் அசோசியேட்டடு டிரை ஐ' பிரச்னையும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான்.

மாஸ்க்கை சரியாக அணிவதுதான் இதற்கான ஒரே தீர்வு. அது மூக்கின் மேல் சரியாகப் பொருந்தும்படி அதற்கான பிரத்யேக டேப் ஒட்டிக்கொள்ளலாம் அல்லது நோஸ் க்ளிப் உள்ள மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டும் மாஸ்க்கை லூஸாக்காமல் வைத்திருக்கும்.

A man carries his granddaughter wearing face masks
A man carries his granddaughter wearing face masks
AP Photo/Mahesh Kumar A
Covid Questions: மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்; பிள்ளைகளுக்கு எந்த மாஸ்க் ஏற்றது?

கண்ணாடி அணியும் பழக்கமுள்ளவர்களுக்கு அடிக்கடி கண்ணாடியில் புகைமூட்டம் போன்று படிந்தால், மூச்சுக்காற்று வெளியேறி கண்ணாடியில் படிவதாக அர்த்தம். `மாஸ்க் அசோசியேட்டடு டிரை ஐ' பாதிப்பு உள்ளவர்களுக்கும் அப்படித்தான் ஆகும். மாஸ்க்கை டைட்டாக அணிந்துகொள்கிறேன் என்ற பெயரில் சிலர் கண் இமைகளுக்குக் கீழே இறுக்கமாக அணிந்துகொள்வார்கள். அதனால் கண்களைச் சிமிட்டவே முடியாமல் அதனாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.

கண்களில் எரிச்சல், திடீரென கண்ணீர் கொட்டுவது, கண்களுக்குள் மணல் இருப்பது போன்ற உறுத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முதலில் நீங்கள் சரியாக மாஸ்க் அணிகிறீர்களா என்பதை கவனியுங்கள். அதன் பிறகு கண் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு