Published:Updated:

Covid Questions: கோவிட் இழப்புகளால் பதற்றத்துக்கும் பயத்துக்கும் உள்ளாகும் குழந்தைகள்; தீர்வு உண்டா?

Depression (Representational Image) ( Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கோவிட் இழப்புகளால் பதற்றத்துக்கும் பயத்துக்கும் உள்ளாகும் குழந்தைகள்; தீர்வு உண்டா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Depression (Representational Image) ( Pixabay )

கோவிட் பாதிப்பின் இரண்டாம் அலையில் என் மாமனார் மற்றும் மைத்துனரைப் பறிகொடுத்தோம். எங்கள் 15 வயது மகள் இவர்களுடன் மிகவும் அன்பாக, நெருக்கமாக இருந்தவள். அவர்களின் இழப்பிலிருந்து அவளால் இன்னும் மீளமுடியவில்லை. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அவள் சரியாகத் தூங்குவதில்லை. எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள். திடீர் திடீரென அழுகிறாள். என்னதான் சமாதானப்படுத்தினாலும் அவளை பழையநிலைக்கு மாற்ற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? சரியாகிவிடுவாளா?

- பல்லவி (விகடன் இணையத்திலிருந்து)

மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்
மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்.

``இதை Post traumatic Stress Disorder என்று சொல்வோம். மிகப்பெரிய இழப்புக்குப் பிறகு ஏற்படுகிற மனநல பாதிப்பு. நெருங்கியவர்களின் இழப்பு, திடீர் விபத்து, பிரிவு, தாங்க முடியாத சோகம் போன்றவற்றை எதிர்கொள்பவர்களுக்கு ஏற்படும். இதனால் பாதிக்கப்படுவோருக்கு தூக்கமின்மை, பயம், நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்குமோ என்ற பதற்றம் என கலவையான மனக் குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எந்த வயதினருக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஏற்கெனவே உடல் மற்றும் மனநலம் தொடர்பான தீவிர பாதிப்புகள் ஏதும் இருப்பவர்களுக்கும் Post traumatic Stress Disorder பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எப்படியிருப்பினும் இது குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான் என்பதால் கவலை வேண்டாம்.

வழக்கமான விஷயங்கள் தவிர்த்து வாழ்வியலில் சில மாற்றங்கள் செய்துகொள்வதன் மூலம் இதிலிருந்து மீண்டுவரலாம். உதாரணத்துக்கு உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல ஓய்வு, பதற்றத்தைக் கூட்டும் மீடியா செய்திகள், கேட்ஜெட் உபயோகம் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது, பிடித்த விஷயங்களில் கவனத்தைத் திருப்புவது போன்றவை அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனநல ஆரோக்கியத்தில் எதிர்மறை எண்ணங்களை நிர்வகிப்பது மிக முக்கியம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க உங்கள் குழந்தைக்குப் பயிற்சி அளியுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை சுயமாக கட்டுப்படுத்தக் கற்றுக்கொடுங்கள்.. முக்கியமாக கோபம், நெகட்டிவ் எண்ணங்கள் மற்றும் பதற்றம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாளக் கற்றுத்தர வேண்டும். உங்களால் அவற்றைச் செய்ய முடியவில்லை, உங்கள் மகளின் நடவடிக்கைகளில் மாற்றமும் இல்லை என்று உணர்ந்தால் மனநல மருத்துவரின் உதவியோடு உடனடியாக சிகிச்சையைத் தொடங்குவது சிறந்தது.

Depression (Representational Image)
Depression (Representational Image)
Photo by Prasanth Inturi from Pexels

உடல்வலி, சுவாசிப்பதில் சிரமம், கவனம் குறைவது, பதற்றம் போன்ற அறிகுறிகளும் இருக்கும்பட்சத்தில் தாமதிக்காமல் சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது. மிக முக்கியமாக உங்கள் மகள் கேட்ஜெட்டுக்கு அடிமையாகிவிடாமலும் தனிமைக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். சேர்ந்து சாப்பிடுவது, சேர்ந்து பேசுவது ஃபேமிலி டைமை அதிகப்படுத்துங்கள். உங்களுடைய பாசிட்டிவ்வான அணுகுமுறையும் சரியான நேரத்து சிகிச்சையும் அவளை நிச்சயம் பழையநிலைக்குக் கொண்டு வரும். பயம் வேண்டாம்."

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்... நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கமும், கொத்துக்கொத்தான மரணங்கள் இன்னொரு பக்கமுமாக மக்கள் பீதியில், பதற்றத்தில் இருந்தனர். வதந்திகளால் மிரண்டுபோயிருந்த அவர்களது பயத்தைப் போக்க, நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களைக் கொண்டுசேர்க்க `Covid Questions' என்ற பகுதியை விகடன் இணையதளத்தில் ஆரம்பித்தோம். கோவிட் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்றுத் தரும் `கோவிட் கொஸ்டீன்ஸ்' பகுதி, 150 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் வாசகர்களின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடாக இல்லை.
Covid Questions
Covid Questions
AP Illustration/Peter Hamlin
தொடக்கத்தில் கோவிட் தொடர்பாக மட்டும் கேள்வி கேட்ட வாசகர்கள், தற்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் வாசகர்கள். இனி அதற்கும் நாங்கள் ரெடி! ஆம், இனிமேல் கோவிட் தொடர்பாக மட்டுமல்ல; உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும், வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்த புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! என்ன... ஆரம்பிப்போமா?