Published:Updated:

`காதல் தோல்வி, இருட்டைத் தேடுகிறான் என் நண்பன்'-வாசகரின் கேள்விக்கு மருத்துவரின் பதில் #NoMoreStress

தினேஷ் ராமையா

காதல் தோல்வியால் ஏற்பட்ட வெறுமை மற்றும் மன அழுத்தத்திலிருந்து தனது நண்பர் ஒருவரால் மீள முடியவில்லை. இதற்குத் தீர்வு சொல்லும்படி வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

stress
stress ( Pixabay )

``என்னுடைய நண்பன் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறான். எப்போதும் அமைதியாகவே இருப்பான். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காதல் தோல்வியில், ஏமாற்றத்தில் இருக்கிறான். அதிகமாக யோசிப்பான். யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. எதுவாக இருந்தாலும் தனக்குள்ளேயே மனதில் வைத்துக் கொள்கிறான். எப்போதும் தனிமையாகவே இருக்க விரும்புகிறான். தனிமையையும் இருட்டையும் தேடிச் செல்கிறான். வீட்டில், பகலில்கூட வெளிச்சம் இல்லாத இடத்தில்தான் இருக்கிறான். வெளியில் முடிந்த அளவுக்கு சாதாரணமாகக் காட்டிக் கொண்டாலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளான். ஆனால் அதைப்பற்றி யாரிடமும் எதையும் கூறுவதில்லை. பல்வேறு மனநல மருத்துவரிடம் காண்பித்தும் எந்த மாற்றமும் தெரியவில்லை.

Stress
Stress
Pixabay

மீண்டும் கூட்டிச் சென்றாலும் அதற்குப் பயன் இல்லை என்று தோன்றுகிறது. அதிகமாக கோபம் வருகிறது. காமெடி படம் பார்த்தாலும் சிரிப்பையே பார்க்க முடிவதில்லை. யாராவது அவனிடம் பேசும்போது அதைக்கூட அவனால் முழுமையாக கவனிக்க முடிவதில்லை. ஏதோ ஒன்றை யோசித்துக்கொண்டே இருக்கிறான். ஒரு நாளைக்கு 2 வேளைகூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. இரவு 3 மணி ஆனாலும் சரியாக தூங்குவதில்லை. வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றாலும், அப்போதைக்கு மட்டும் இயல்பாக இருக்கிறான். சிறிது நேரத்தில் பழைய நிலைமைக்கு, மன அழுத்தத்துக்கு வந்து விடுகிறான். புதிதாக, புகை, போதைப்பழக்கம் வேறு வந்துவிட்டது. அவனை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். மனதளவில் மாற்ற வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டிருந்தார்.

இந்தக் கேள்வியை மனநல மருத்துவர் தீபதியிடம் முன்வைத்தோம். ``அவருக்கு மருத்துவரீதியிலான உதவி உடனடியாகத் தேவை. மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரின் தொடர்ச்சியான உதவி அவருக்குத் தேவை. அந்தப் பிரச்னையிலிருந்து அடுத்தகட்டத்துக்கு அவர் செல்ல வேண்டும். இதை மனநலன் சார்ந்த மருத்துவர்கள் அல்லது ஆலோசகரால் மட்டுமே உதவி செய்ய முடியும்.

Doctor Deepathi
Doctor Deepathi

அதேபோல், குடும்பத்தினர் மட்டும் அவரது நண்பர்கள் என அவரைச் சுற்றியிருப்பவர்களின் உதவியும் அவசியம். அதேபோல், அவரது நண்பர்களின் சூழலையும் கருத்தில்கொள்ள வேண்டும். பிரச்னைகளுக்கான தீர்வாக அவர் மதுவை நாடியிருக்கும் சூழலில் உடனடியாக அவருக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.

இதேபோல் உங்களுக்கும் ஏதேனும் மனநலம் சார்ந்த சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தால் தீர்வு தேடித் தரக் காத்திருக்கிறது விகடன்!

உங்களுடைய பிரச்னைகளைப் பற்றி விவரமாக எழுதி,

mentalhealth@vikatan.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதற்கான தீர்வுகள் நிபுணர்களிடம் கேட்கப்பட்டு விகடன் இணையதளத்தில் விரைவில் பகிரப்படும்.

#NoMoreStress