Published:Updated:

மெடிக்கல் கேட்ஜெட்களில் போலிகளை அடையாளம் காண்பது எப்படி? - ஈஸி டிப்ஸ்

பல்ஸ் ஆக்ஸி மீட்டர்
பல்ஸ் ஆக்ஸி மீட்டர்

வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மருத்துவக் கருவிகளை வாங்கும்போது தரத்தில் சமரசம் கூடாது. விலை குறைவான பொருள்களை வாங்கினால் துல்லியத் தன்மை இல்லாமல் போய்விடும்.

கொரோனா லாக்டௌனால் முன்புபோல மக்களால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை. இதனால், வீட்டிலேயே சர்க்கரை அளவை பரிசோதிப்பது முதல் ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்வதுவரை, ஆரோக்கியத்தைக் கண்காணிக்க கைகொடுக்கும் மருத்துவக் கருவிகளின் (Medical Gadgets) பயன்பாடு அதிகரித்துள்ளது.

நாம் வாங்கும் மருத்துவக் கருவிகளில் போலிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

* வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மருத்துவக் கருவிகளை வாங்கும்போது தரத்தில் சமரசம் கூடாது. விலை குறைவான பொருள்களை வாங்கினால் துல்லியத் தன்மை இல்லாமல் போய்விடும்.

குளுக்கோமீட்டர்
குளுக்கோமீட்டர்

* இந்தியத் தயாரிப்பு மருத்துவக் கருவியாக இருந்தால் அதில் ISI (Indian Standards Institution) முத்திரை அல்லது IMA (Indian Medical Association) முத்திரை இருக்கும் அல்லது MCI (Medical Council of India) சான்று அளித்திருக்க வேண்டும்.

* மேற்சொன்ன எந்த முத்திரையும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் மருத்துவக் கருவியாக இருந்தால், அது FDA (The Food and Drug Administration) சான்று பெற்றிருக்க வேண்டும். கூடவே, மேற்கண்ட இந்திய நிறுவனங்களில் ஏதாவது ஒன்று சான்று அளித்திருக்கும். இவை எதுவுமே இல்லையென்றால் அது 100% போலியானது.

* ஆன்லைனில் வாங்கும்போதும் மேற்சொன்ன முத்திரைகளைக் கவனிக்க வேண்டும். அவற்றுக்கான ரெவ்யூவையும் படிக்க வேண்டும்.

* குளுக்கோமீட்டரைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாக உள்ளதால், சந்தையில் அதில் போலிகளும் அதிகமாக உள்ளன என்பதால் அதைக் கவனித்து வாங்க வேண்டும்.

> தெர்மாமீட்டர்... கண்கள் கவனம்!

> பிளட் பிரஷர் மானிட்டர்... கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!

> குளுக்கோமீட்டர்... சர்க்கரை அளவு குறைந்தால் அலர்ட்!

> பல்ஸ் ஆக்ஸி மீட்டர்... 20 விநாடிகள் பொறுமை!

- ஒவ்வொரு வீட்டிலும் அவசியமாக இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்குகிறார், மதுரை மருத்துவக்கல்லூரியின் உடற்கூறியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராஜ்கோகிலா.

இதுகுறித்த முழுமையான கைடன்ஸ் பகுதியை அவள் விகடன் இதழில் வாசிக்க > உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்! https://bit.ly/3l6wnuQ

பிளட் பிரஷர் மானிட்டர்
பிளட் பிரஷர் மானிட்டர்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு