Published:Updated:

Doctor Vikatan: பீரியட்ஸின் போது வலியை ஏற்படுத்தும் அடினோமயோசிஸ்; தீர்வு என்ன?

Doctor Vikatan
News
Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: பீரியட்ஸின் போது வலியை ஏற்படுத்தும் அடினோமயோசிஸ்; தீர்வு என்ன?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan
News
Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

என் மனைவிக்கு 40 வயது. கடந்த 3 மாதங்களாக அவருக்கு அடினோமயோசிஸ் பிரச்னை இருக்கிறது. இதற்கு என்ன காரணம்... இதை குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா?

- நந்தகுமார், விகடன் இணையத்திலிருந்து

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``அடினோமயோசிஸ் (Adenomyosis) என்பது கரப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருக்கும் நிலை. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும்.

அதுதான் அடினோமயோசிஸ். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கரப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடிவதில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கரப்பப்பை பெரிதாகிறது.

மாதவிடாயின்போது வலியும் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள், அறுவை சிகிச்சை என இரண்டு தீர்வுகள் உண்டு. ஹார்மோன் மாத்திரைகள் வேண்டாம் என்போருக்கு, பீரியட்ஸின்போது சாதாரண வலி நிவாரணிகள் கொடுத்தால் சரியாகிவிடும்.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Ivan Samkov from Pexels

21 நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளும் இருக்கின்றன. ஆனால் இவை ஹார்மோன் மாத்திரைகள்.

இவற்றில் சரியாகவில்லை என்றால் கரப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அப்படி கரப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வதாக இருந்தால் சினைப்பைகளை நீக்க வேண்டிய அவசியமில்லை. வயிற்றைத் திறந்தோ அல்லது லேப்ராஸ்கோப்பி முறையிலோ இந்த ஆபரேஷனை செய்து கொள்ளலாம்.

அடினோமயோசிஸ் பிரச்னையை லைஃப்ஸ்டைல் மாற்றங்கள் மூலமோ, உடற்பயிற்சிகள் மூலமோ குணப்படுத்த முடியாது. அதற்கான சரியான சிகிச்சை மூலம்தான் சரிசெய்ய முடியும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?