Published:Updated:

கோவிட் தடுப்பூசிக்கு எளிதான முன்பதிவு; சென்னை மாநகராட்சியின் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி ( AP Photo/Rafiq Maqbool )

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அனைவரும் தடுப்பூசியைப் பெறுவதற்கு இதில் பெயரைப் பதிவு செய்யலாம். இந்த முன்பதிவு தடுப்பூசி மையத்தில் ஸ்லாட்களைப் பெறுவதற்கு மட்டுமே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் CoWIN ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆனால், சென்னைவாசிகள் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு தங்கள் இடங்களைப் பதிவு செய்வதற்கு எளிய வழியைப் பெருநகர சென்னை கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அனைவரும் தடுப்பூசியைப் பெறுவதற்கு இதில் பெயரைப் பதிவு செய்யலாம்.

மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்துக்குச் சென்று முகப்புப் பக்கத்தில் Covid-19 என்பதை க்ளிக் செய்து பக்கத்துக்குள் நுழைய வேண்டும். அந்தப் பக்கத்தில் Vaccine Registration என்பதை க்ளிக் செய்தால் பெயரைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளைச் செய்துகொள்ளலாம்.

நேரடியாக https://gccvaccine.in/ என்ற இணைப்பில் சென்றும் இடங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் தளத்தின் மூலம் பதிவுசெய்து கொள்வது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Vaccine Portal
Vaccine Portal

இதுபற்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர மருத்துவ அதிகாரி டாக்டர் ஹேமலதாவிடம் பேசினோம். ``சென்னை மாநகராட்சிக்குப்பட்ட மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு 3 தடுப்பூசி மையங்கள் வீதம் 15 மண்டலங்களில் மொத்தம் 45 தடுப்பூசி மையங்களில் போடப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தத் தளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள மையங்களிலேயே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எதைப் போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் பதிவின் போதே குறிப்பிட முடியும். ஒரு மையத்தில் 300 டோஸ் தடுப்பூசி இருப்பு இருக்கிறது என்றால் அவற்றில் 100 டோஸ்களுக்கான ஸ்லாட்டை ஆன்லைன் மூலம் பதிவுசெய்ய முடியும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மீதம் உள்ள 200 டோஸ் தடுப்பூசிகள் நேரடியாக மையங்களுக்கு வருவோருக்கு அளிக்கப்படும். பதிவுசெய்யும்போதே அந்த மையத்தில் கோவிஷீல்டு அல்லது கோவாக்சினுக்கான ஸ்லாட்டுகள் எத்தனை மீதமுள்ளன என்பதையும் பார்க்க முடியும்.

தடுப்பூசி இருப்பு உள்ளதன் அடிப்படையில்தான் ஆன்லைனில் இடங்களைப் பதிவு செய்ய முடியும். தடுப்பூசி இருப்பு இல்லை அல்லது ஆன்லைன் பதிவுக்கான இடங்கள் நிறைவடைந்து விட்டன என்றால் மீண்டும் அடுத்த நாள் முயன்று பதிவு செய்யலாம்.

தடுப்பூசி முன்பதிவு
தடுப்பூசி முன்பதிவு

பதிவுசெய்த ஸ்லாட்டை வேறு நாளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட நாளுக்கு பெயரைப் பதிவுசெய்து விட்டு அன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் பதிவுசெய்த பிறகே மையங்களில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் அல்லது நேரடியாகச் சென்றும் போட்டுக்கொள்ளலாம்.

இதுவும் CoWIN செயலியின் பதிவும் ஒன்றல்ல. இந்த முன்பதிவு, தடுப்பூசி மையத்தில் ஸ்லாட்களைப் பெறுவதற்கு மட்டுமே. CoWIN செயலியில் உங்கள் விவரங்களைத் தடுப்பூசி மைய ஊழியர்கள் பதிவுசெய்வார்கள். CoWIN செயலியில் பதிவு செய்ய, OTP சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு செல்போன் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைத் தடுப்பூசி போடச் செல்லும்போது கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி
கொரோனா தடுப்பூசி போடும் பணி
Covid Questions: தடுப்பூசி போடாமலேயே ஊசி போடப்பட்டதாக SMS வந்துள்ளது; என்ன செய்வது?

ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மையங்களில் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி மையங்களில் ஊழியர்கள் காலை 8 மணிக்கு வந்து முன்தயாரிப்பு வேலைகளைச் செய்வார்கள். சரியாக காலை 9 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு தனித்தனி வரிசை பின்பற்றப்படும்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு