Published:Updated:

லாக்டௌனில் எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தம்... மீளவும் மாறவும் உளவியல் அட்வைஸ்!

Stress
Stress

இன்ட்ரோவெர்ட் (Introvert), எக்ஸ்ட்ரோவெர்ட் (Extrovert) என மனிதர்களை இருவகையாகப் பிரிக்கலாம். இன்ட்ரோவெர்ட்டுகள், அனைவரோடும் ஒன்றிணையாமல் தங்களுக்கென சிறு வட்டத்துக்குள் பயணிப்பவர்கள்.

அமெரிக்காவில் எல்லாம் இன்ஸ்டன்ட் மயம் என்றே இதுவரை கேள்விப்பட்டிருப்போம். கொரோனாவின் கோரத்தாண்டவம் அந்தப் பார்வையை மாற்றியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் இன்ஸ்டன்ட் உணவுகளையும் கடைகளில் வாங்குவதையும் அங்குள்ள மக்கள் தவிர்த்துவருகிறார்கள். வீடுகளுக்குத் தேவையான மசாலா பொடி முதல் உணவுகள்வரை எல்லாவற்றையும் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தும் கலாசாரத்துக்குப் பழகிக்கொண்டிருக்கிறார்களாம்.

food
food

தங்கள் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளவற்றை மற்றவர்களுக்கு விற்று காசு பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்களாம். ஒரு காலத்தில் வீட்டு வேலைகளாகச் செய்த விஷயங்கள், இன்று ஆரோக்கியத்துக்கான, நல்வாழ்வுக்கான விஷயங்களாக மாறி வருவதையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தியாவிலும் மெள்ள மெள்ள இந்த நிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய வேலைகள் பலவிதமான மனநல சிக்கல்களுக்கும் தீர்வாக மாறுவதாகச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள். இதுகுறித்துப் பேசுகிறார், உளவியல் மற்றும் கல்வி ஆலோசகரான பத்மா அனில் குமார்.

பத்மா அனில் குமார்
பத்மா அனில் குமார்

''இந்த ஊரடங்கு காலத்தில், பெரும்பாலான மக்கள் பல புதிய செயல்களைச் செய்யத் தொடங்கி, ரசனையாளர்களாக மாறியிருக்கிறார்கள். ஊரடங்கு மாதக் கணக்கில் தொடரும் நிலை ஏற்பட்டால், இதே விஷயங்கள் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

இன்ட்ரோவெர்ட் (Introvert), எக்ஸ்ட்ரோவெர்ட் (Extrovert) என மனிதர்களை இருவகையாகப் பிரிக்கலாம். இன்ட்ரோவெர்ட்டுகள், அனைவரோடும் ஒன்றிணையாமல் தங்களுக்கென சிறு வட்டத்துக்குள் பயணிப்பவர்கள். இவர்களுக்கு நேர் எதிரானவர்கள் எக்ஸ்ட்ரோவெர்ட் மனிதர்கள் (Extroverts). கலகலப்பான பேர்வழிகள். வீடுகளில் அடைந்திருப்பதை, கையையும் காலையும் உடைத்துப்போட்டதுபோல உணர்வார்கள்.

happy
happy

ஊரடங்கில் இன்ட்ரோவெர்ட்டுகள்தான் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்னும் கருத்து இருக்கிறது. ஆனால், தற்போது எக்ஸ்ட்ரோவெர்ட்டுகளைவிட இன்ட்ரோவேர்ட்டுகள்தான் வீடுகளில் இருப்பதை இரு மடங்கு வெறுக்கிறார்கள் என்பதே உண்மை. வீடுகளுக்குள் மற்ற உறுப்பினர்களால் தங்களுக்கான தனிமை பறிக்கப்பட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். ஆம்பிவெர்ட் (ambivert) என்னும் நடுநிலையில் இருப்பவர்களுக்கு இது எதுவும் சவாலாக இருப்பதில்லை.

`இன்சோம்னியா பிரச்னையால் தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்?'- நிபுணர் தரும் தீர்வுகள்!

இதுவரை கடந்துவந்த ஊரடங்கு நாள்கள், கோடை விடுமுறை போன்ற எண்ணத்தையே பலருக்கும் கொடுத்திருக்கிறது. இனிவரும் மாதங்களில், வேலை தேட வேண்டும்... படிப்பைத் தொடர வேண்டும் போன்ற எண்ணங்கள் படிப்படியாக மன-அழுத்தங்களாக உருவாகும். இந்நேரத்தில் ANT எனப்படும் ஆட்டோமேட்டிக் நெகட்டிவ் எண்ணங்களால் (Automatic negative thoughts) தாக்கப்படுவது இயல்புதான். ஏற்கெனவே ஹிஸ்டீரியா, டெல்யூஷன்ஸ் போன்ற மனநல பிரச்னைகள் கொண்டவர்களின் நிலைமை முன்பைவிட மோசமாகலாம். கொரோனா காலகட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் துயர சம்பவங்கள் மேலும் எதிர்மறையாகவே சிந்திக்கத் தூண்டுகின்றன.

Stress
Stress

இப்படி எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனநல சிக்கல்களை எதிர்கொள்ள, வீட்டு வேலைகள் பெரிய வடிகாலாக அமையும். இருக்கும் பொருள்களைவைத்து சமைப்பது முதல் கிரியேட்டிவ்வான வேலைகளில் ஈடுபடுவதுவரை பல விஷயங்கள், எதிர்மறை எண்ணங்களுக்குள் மூழ்கவிடாமல் மக்களைக் காக்கும். ஆனால், அன்றாடம் வேலைக்குச் செல்வது சலிப்பைத் தருவது போலவே, தொடர் ஊரடங்கும் வீடுகளுக்குள் முடங்கியபடி செய்கிற இந்த வேலைகளும் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தலாம்.

``லாக்டெளனால் மனஉளைச்சலா? மீம்ஸ், ஜோக்ஸ் பாருங்கள்!'' - மனநல மருத்துவர் #GoodReadAtVikatan

இதிலிருந்து வெளிவர மைண்ட்ஃபுல்னெஸ் மனநிலை கைகொடுக்கும். அதாவது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும் அதை கான்ஷியசாகச் (conscious) செய்வதால் சிந்தனைகளைப் பகுத்தாய்வு செய்யமுடிகிறது. நெகட்டிவ்வான சூழ்நிலைகளில் எதிர்மறை எண்ணங்களை கான்ஷியசாகத் தடுத்து, பாசிட்டிவ் சிந்தனைகளோடு வாழ்க்கையை அணுக இந்த மைண்ட்ஃபுல்னெஸ் உதவுகிறது. திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தையே செய்தாலும் கான்ஷியஸாகச் செய்யும்போது அது சலிப்பை ஏற்படுத்தாது.

வீட்டுவேலை
வீட்டுவேலை

லாக்டௌன் நாள்களில் வீட்டு வேலைகளைச் செய்வதை சுமையாகப் பார்க்காமல், மைண்ட்ஃபுல்னெஸ்ஸுடன் செய்யும்போது, அவையே மனநலனுக்கான மறைமுக சிகிச்சையாகவும் மாறும் என்பதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள்'' என்கிறார், கவுன்சலிங் சைக்காலஜிஸ்ட் பத்மா அனில் குமார்.

அடுத்த கட்டுரைக்கு