Published:Updated:

பயணங்களில் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஏன்... தீர்வுகள் என்னென்ன?

ரயில் பயணம்
ரயில் பயணம் ( சாய் தர்மராஜ் )

சிலருக்கு மட்டும் ஏன் பயணங்களில் இந்த அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன?

ஒரு மாதத்துக்கு முன் திட்டமிட்டு, ஒரு வாரத்துக்கு முன்னரே பேக்கிங் செய்து பயணங்கள் ஆரம்பித்தது அந்தக் காலம். தற்போதெல்லாம், உடனுக்குடன் பயணங்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பஸ், கார், பைக், ரயில், விமானம் என்று எந்தப் பயணம் என்றாலும், `ஐ'ம் ரெடி' என்று நிற்பவர்கள் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் `அய்யோ டிராவலா, எனக்கு வாந்தி வருமே?', `மயக்கம் வந்துடுமே?', `லாங் டிராவல் போனாலே எனக்கு குமட்டலா வருமே' என்று மருகுபவர்கள், அந்தக் காலம், இந்தக் காலம் என்ற பாடுபாடு இல்லாமல் என்றும் இருக்கிறார்கள்.

நண்பர்கள், உறவுகள் என்று எவ்வளவு குதூகலமான பயணமாக இருந்தாலும், இவர்களின் இந்த உடல்நிலை அந்தப் பயணத்தின் மகிழ்வையே குறைத்துவிடுவதாக இருக்கிறது. சிலருக்கு மட்டும் ஏன் பயணங்களில் இந்த அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன? இவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன? பொது மருத்துவர் ந.சு.முத்தையா விளக்குகிறார்.

பயணங்களில் உடல்நிலை அசௌகர்யங்கள்... காரணம்!

``பொதுவாக மனிதர்களுக்கு, உட்செவிப் பகுதியில் உடல் சமநிலையை ஒழுங்குபடுத்தும் லேபரிந்த் (Labyrinth) என்னும் நுண்ணிய அமைப்பு இருக்கும். நாம் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் அசைவுகளுக்கு ஏற்ப நம் உடலின் சமநிலையை இதுதான் பேணும். இந்த உறுப்பின் செயல்பாட்டை மீறி அந்தச் சமநிலை தவறும்போது, பயணங்களில் உடல் அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன.

ரயில் பயணங்களில்
ரயில் பயணங்களில்
Vikatan

வளர்ந்த பின் சரியாகும்!

பயணங்களின்போது உடலின் சமநிலை தவறுவது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். பலருக்கும் இதை உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும். சிலருக்கோ அது கட்டுப்பாட்டை மீறி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகின்றன. சிறுவயதினருக்கே இது அதிகம் ஏற்படுகிறது. வளர வளர இந்தச் சமநிலை பாதிப்பு பலருக்கும் சரியாகிவிடும்.

தீர்வுகள், மருந்துகள், சிகிச்சைகள்!

* ஒவ்வொரு பயணத்துக்கும் முன்பாக மருத்துவரிடம் சென்று, உடல்நிலைக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பயண டென்ஷனிலோ சந்தோஷத்திலோ மருந்துகளை மறந்துவிடாமல், மருத்துவரின் அறிவுரைப்படி நேரம் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம்.

இருமல் மருந்து
இருமல் மருந்து

* இந்த மருந்துகள் சிறிது தூக்கம் வரவழைக்கும் தன்மை கொண்டவை என்பதால், வாகனம் ஓட்டுபவராக இருந்தால் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.

* காதுகளுக்குப் பின்புறம் ஒட்டும்படியான பேட்ச்கள் தொலைதூரப் பயணங்களில் நல்ல பலனளிக்கும்.

* பயணத்தின்போது அருகில் தெரியும், வேகமாக நகரும் காட்சிகளைக் காண்பது பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே, முடிந்தவரை தூரமாகப் பார்ப்பது நல்லது.

* கண்களை மூடி அமைதியாக இருப்பது, படுத்த நிலையில் பயணம் செய்வது போன்றவை இந்தப் பாதிப்பை வெகுவாகக் குறைக்க உதவும்.

* பயணம் செய்யும் வாகனத்தின் அளவு சிறியதாகும்போது, இந்தப் பாதிப்பு அதிகமாகும்.

``தடுப்பு மருந்துகள் உதவாது... பயணங்களைத் தவிர்த்திடுங்கள்!" - கொரோனாவுக்கு மருத்துவரின் அட்வைஸ்

* பெரும்பாலும் தொடர்வண்டி பயணத்தின்போது இந்தப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. பேருந்து மற்றும் கார் பயணங்களில்தான் இதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

* பேருந்துப் பயணத்தில் பின்பகுதியில் அமர்ந்து பயணம் செய்வதைத் தவிர்த்து, அசைவுகள் குறைவாக உள்ள முன்பகுதியைத் தேர்ந்தெடுத்து அமர்வது நல்லது.

* வயிறு நிறைய உண்டால் குமட்டல் ஏற்படும் என்று பயந்து சாப்பிடாமல் பயணம் செய்வதும் தவறு. வெறும் வயிறும் வாந்தி உணர்வை ஏற்படுத்தும். எனவே, பயணங்களின்போது மிதமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பயணத்தின்போது புத்தகம் படிப்பது, மொபைல் பார்ப்பது, திரையில் காட்சிகளைக் காண்பது போன்றவை எல்லாம் இந்தப் பாதிப்புகளை வரவழைக்கலாம் என்பதால் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

Representational Image
Representational Image

* ரயில், பேருந்து, கார் எனக் குளிர்சாதன வசதியுடன்கூடிய பயணம் இந்த நிலையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* காதுகளை அடைத்துக்கொண்டு, உறங்கும் நிலையில் பயணம் செய்வது இந்தப் பாதிப்பைக் குறைக்க உதவும்.''

அடுத்த கட்டுரைக்கு