கட்டுரைகள்
Published:Updated:

நம் வீடு... நலம் நாடு!

வொர்க் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
News
வொர்க் ஃப்ரம் ஹோம்

வொர்க் ஃப்ரம் ஹோம்

கோவிட் - 19 கொரோனா பரவுதலைத் தொடர்ந்து, இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதி வரையில் நாடு தழுவிய 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது நம் மத்திய அரசு. வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகள் செய்யும்போது நம் உடல்நலம் காக்க என்ன செய்ய வேண்டும்?

இத்தனை நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை பார்த்துவிட்டு, திடீரென வீட்டிலிருந்தபடி பணிபுரியும்போது, பணி நிமித்தமான மாற்றங்களோடு சேர்த்து உடல் ரீதியான - மன ரீதியான மாற்றங்களையும் நம்மில் பலரும் எதிர்கொள்வோம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும், விரும்பிய இடத்தில் - விரும்பிய நேரத்தில் வேலை செய்யவும் ஓய்வெடுக்கவும் முடியும்... இப்படி வொர்க் ஃப்ரம் ஹோமில் பாசிட்டிவான விஷயங்களும் உண்டு. கூடவே சில சிக்கல்களையும் சமாளித்துதானாக வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே சிறந்த வேலைச் சூழலை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் - கழுத்து வலி, இடுப்பு வலியெல்லாம் வராமல் இருக்க எப்படி பாஸ்சர் கரெக்‌ஷன் செய்துகொள்ள வேண்டும்... பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவனிடம் அதற்கான ஆலோசனைகள் கேட்டோம்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

``அலுவலகத்தில், உட்கார்வதற்கும் - அட்ஜஸ்ட் செய்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் ரோலிங் நாற்காலிகள் இருந்திருக்கும் என்பதால் அலுவகத்தில் குறிப்பிட்ட ஒரே பாஸ்சரில் பல மணி நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்போம். ஆனால் வீட்டில் சோஃபா, கட்டில், டைனிங் டேபிள், தரை எனக் காணும் எல்லா இடங்களிலும் விரும்பிய பொசிஷனில் நிமிடம் ஒருமுறை மாறி மாறி வேலை பார்ப்போம். இதுதான் மூட்டுப் பிரச்னைகளுக்கான அடிப்படை. ஆகவே முதலில் நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது இதைத்தான்.

பாஸ்சரைப் பொறுத்தவரையில், சௌகர்யமாக உட்கார வேண்டும் என்பதைவிட சரியாக உட்கார வேண்டுமென்பதே முக்கியம். எப்போதும் கணினியின் திரை கண்களுக்கு நேராக இருக்க வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும், 20 மீட்டர் தொலைவிலுள்ள ஏதாவதொரு பொருளைக் குறைந்தபட்சம் 20 விநாடிகளுக்குப் பார்ப்பது நல்லது. இதன்மூலம் கண் வறட்சியை எளிதில் தவிர்க்கலாம். அதேபோல, கால்கள் தொங்கிய நிலையிலும் – பாதங்கள் தரையிலோ அல்லது ஏதேனுமொரு பொருளின் மீதோ முழுமையாகப் படர்ந்த நிலையிலும் இருக்க வேண்டியது அவசியம்.

வீட்டில் லேப்டாப்பில் பணிசெய்யும்போது, கீபோர்டு, மவுஸ் போன்றவை திரைக்கு மிக அருகிலிருந்து வேலை பார்க்கும் உணர்வை நமக்கு உருவாக்கும். உடல் பாஸ்சர் சரியாக அமையாமல் போக, இதுவுமொரு காரணம். ஆகவே அலுவலக கம்ப்யூட்டர்களில் இருப்பதுபோல கீபோர்டு மவுஸை தனித்தனியாக வைத்துக்கொள்வது சிறப்பு.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

பணிபுரியும் இடம் எப்போதும் வெளிச்சமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். அப்போதுதான் புத்துணர்வோடு வேலை செய்ய இயலும். அலுவலகத்தில் லைட்டிங் பிரச்னை இருந்திருக்காது என்பதால் நாம் இதுகுறித்து அதிகம் யோசித்திருக்கமாட்டோம். வீட்டில் இந்தச் சூழலை உருவாக்கிக் கொள்வது நம் கடமை. இதைச் செய்வதனால் கண் வறட்சி, கண் வலி போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.

நம்மில் பலரும் அலுவலகத்தில் இரைச்சலின்றி, சத்தமின்றி அமைதியான ஒரு சூழலில் வேலை செய்திருப்போம். வீட்டில் அது சாத்தியப்படாது. வீட்டில் வேலைசெய்கிறபோது, இடையூறுகளற்ற தனி ஓர் அறையோ இடமோ இருப்பது சிறப்பு.

நம் வீடு... நலம் நாடு!

வீட்டில் லேப்டாப் மட்டுமே இருக்கிறது, அதேநேரம் அட்ஜஸ்ட் செய்ய இயலா நாற்காலிதான் இருக்கிறது என்பவர்கள், லேப்டாப்பை இரண்டு அடுக்குக்கு மேல் வைத்து, கண்களுக்கு நேரே திரை வருமாறு பயன்படுத்தவும்.

அலுவலகத்தைவிடவும் வீட்டில் குறைவாகவே பலரும் பிரேக் எடுக்கிறார்கள் என்பது ஓர் ஆய்வு முடிவு. ஏனெனில் வீட்டில் தண்ணீர் முதல் சாப்பாடு ஸ்நாக்ஸ்வரை எல்லாமே உட்கார்ந்த இடத்துக்கே வந்துவிடும்! எழுந்து சென்றாலும், அதிகபட்சம் ஒரு ரூம்தான். இதனால் நடப்பதும் வெகுவாகக் குறைந்துவிடும். இது உடல் சோர்வுக்கு வழிவகுக்கும் என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே நடந்து பழகலாம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இடத்தை விட்டு எழுந்து நடப்பது அவசியம். இப்படி ஒவ்வோர் இடைவேளையிலும், கழுத்து - தோள்பட்டை - முதுகு - கால் மற்றும் கை மூட்டுப்பகுதிகளை ஒவ்வொன்றாக நன்கு அசைக்க வேண்டும். அந்த அசைவுகள் யாவும் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைந்தபட்சப் பயிற்சிகளாக இருக்குமென்பதால், அலட்சியம் வேண்டாம்.