Published:Updated:

வெஸ்டர்ன் டாய்லெட்டை சரியாக உபயோகிப்பது எப்படி? #WorldToiletDay #Video #VikatanInfographics

உலக கழிவறை தினத்துக்கான கருவாக, `அடிப்படை கழிவறை வசதி கிடைக்காமல், யாரும் விடுபடக் கூடாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.

World Toilet Day
World Toilet Day

உலகில் 23 லட்சம் பேர் கழிவறை வசதியில்லாமல் வாழ்கின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும், 6 கோடி குழந்தைகள் அடிப்படை கழிவறை வசதிகள்கூட கிடைக்காத இடங்களில் பிறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கழிவறை உபயோகத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும்விதமாக, ஒவ்வோர் ஆண்டும் உலக கழிவறை தினம் நவம்பர் 19-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

கழிவறை
கழிவறை
2019-ம் ஆண்டு உலக கழிவறை தினத்துக்கான கருவாக, `அடிப்படை கழிவறை வசதி கிடைக்காமல், யாரும் விடுபடக் கூடாது' (Leaving No one Behind) என்பதைச் அறிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு.

கழிவறை அவசியத்தோடு சேர்த்து, கழிவறை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டிவருகிறது ஐ.நா. கழிவறை சுகாதாரம் என்பது, நம் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல. டாய்லெட் சீட் தொடங்கி, கழிவறையிலுள்ள மிதியடிவரை கழிவறையின் அனைத்து பொருள்களையும் சுத்தமாக வைத்திருப்பது.

வெஸ்டர்ன் டாய்லெட்டை சரியாக உபயோகிப்பது எப்படி? #WorldToiletDay #Video #VikatanInfographics
`கக்கூஸ் படை’ நோய்க்குக் காரணம் சுகாதாரமற்ற கழிப்பறைகள்!
#WorldToiletDay

வாரம் ஒருமுறை கழிவறையைச் சுத்தம் செய்வது, அப்படிச் சுத்தப்படுத்தும்போது கையுறைகள் அணிந்துகொள்வது, சுத்தப்படுத்திய பின் முகம் கைகால் கழுவுவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இன்று பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வெஸ்டர்ன் கழிவறை உபயோகத்தில், அனைவரும் செய்யும் முக்கியமான தவறு டாய்லெட் சீட்டை மூடாமல் ஃப்ளஷ் செய்வது. இப்படிச் செய்யும்போது, டாய்லெட்டிலுள்ள கிருமிகள் யாவும், ஆறு மீட்டர்வரை மேலெழும்ப வாய்ப்புள்ளதாம். இவை சுற்றியிருக்கும் பொருள்கள் மீதுபட்டு, நோய்த்தொற்று ஏற்படுத்தலாம் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கழிவறை
கழிவறை

கழிவறையிலுள்ள டூத் பிரஷ், பாத் டப், ஷவர், மிதியடி, தரை என அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கிருமிகள் பரவி, அடுத்தடுத்து கழிவறையை உபயோகிப்பவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க, கழிவறையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும், எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும், கழிவறையில் முறையாக அமர்வது எப்படி என்பனவற்றையெல்லாம் கீழ்க்காணும் காணொலி மூலம் இந்தக் கழிவறை தினத்தில் தெரிந்துகொள்ளுங்கள்!