Published:Updated:

நம் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனவா தடுப்பூசிகள்? தரவுகள் சொல்லும் பதில்!

Covid 19 Vaccination ( AP Photo / Rajanish Kakade )

அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 16, 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80% பேர் தடுப்பூசியே எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்கள்.

நம் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனவா தடுப்பூசிகள்? தரவுகள் சொல்லும் பதில்!

அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 16, 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80% பேர் தடுப்பூசியே எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்கள்.

Published:Updated:
Covid 19 Vaccination ( AP Photo / Rajanish Kakade )
Note: இதுபோன்ற மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை எளிமையான வடிவில் தினமும் படிக்க, The Subject Line நியூஸ்லெட்டருக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். கீழே இருக்கும் பாக்ஸில் உங்கள் மின்னஞ்சலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு முயற்சிகளில், மக்களின் உயிரைக் காக்க, நமக்கு மலையளவு கைகொடுத்தவை தடுப்பூசிகளே.

  • இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 72% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். 94% பேர் குறைந்தது ஒரு டோஸாவது எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றின் பலனாகவே, ஓமிக்ரானால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அலையில், உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார் கோவிட் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வி.கே.பால்.

எதை வைத்து அப்படிச் சொன்னார்?

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளரான ராஜேஷ் பூஷண் இரண்டு நாள்களுக்கு முன்பு கொடுத்த டேட்டா இது…

ரண்டாவது அலை சமயமான,

👉 ஏப்ரல் 30, 2021 அன்று இந்தியாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: 3,86,452,

இறப்புகள்: 3,059, அன்று சிகிச்சையில் இருந்த மொத்த நோயாளிகள்: 31,70,228,

அப்போது இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட மக்கள் விகிதம்: 2%

துவே இந்த மூன்றாவது அலையில்,

👉 ஜனவரி 20, 2022 அன்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: 3,17,532 ⬇️

இறப்புகள்: 380 ⬇️, சிகிச்சையில் இருக்கும் மொத்த நோயாளிகள்: 19,24,051 ⬇️,

இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட மக்கள் விகிதம்: 72% ⬆️

இதனால்தான், ``தடுப்பூசிகள் உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைத்திருக்கின்றன” என்றார் அவர்.

இதே இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் டேட்டா இது 👇

👉 ஏப்ரல் 30, 2021 அன்று கொரோனா பாதிப்பு: 18,692, இறப்பு: 113

👉 ஜனவரி 20, 2022 அன்று கொரோனா பாதிப்பு: 28,561 ⬆️, இறப்பு: 39 ⬇️

தமிழகத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்களின் விகிதம்: 65%, ஒரு டோஸ் எடுத்துக்கொண்டவர்கள்: 89%

தமிழக டேட்டா சொல்லும் தகவல்

இதேபோல அண்மையில் தமிழக அரசும் ஒரு டேட்டாவைத் தந்திருக்கிறது. அதன்படி, அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 16, 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80% பேர் தடுப்பூசியே எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்கள்.

  • இந்தக் காலகட்டத்தில் பதிவான 1,411 மரணங்களில், 68% பேர் ஒரு டோஸ் தடுப்பூசிகூட எடுத்துக்கொள்ளாதவர்கள். 811 பேர் இணை நோய்களைக் கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ⚠️ (அதிக ரிஸ்க் உள்ள பிரிவினர்).

  • இதேபோல ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக்கொண்டு உயிரிழந்தவர்களிலும் 135 பேர் இணை நோய்களைக் கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களே.

  • 50 வயதுக்கு கீழேயுள்ளவர்களிடையேயும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றனதான். ஆனால், ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. எனவே எந்த வயதினராக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ரிஸ்க்தான்!

தகவல் உதவி: The Hindu

ஆனால், இந்த மூன்றாவது அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்களே?

காரணம் இதுதான்.

  • கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கினால் ஏற்படுவது தொற்று (Infection). அந்த வைரஸ் நம் உடலில் உண்டாக்கும் நோய்தான் கோவிட் 19 (Disease). இந்த நோய் தீவிரமானால் ஏற்படுவதுதான் உயிரிழப்பு. இதில் தடுப்பூசிகளின் நோக்கம், இந்த உயிரிழப்பைத் தடுப்பதே.

  • உதாரணமாக, டெல்டா வேரியன்ட்டுக்கு எதிராக கோவிஷீல்டின் திறன்: தொற்றுக்கு எதிராக 63%, நோய்க்கு எதிராக 85%

  • அதுவும் ஓமிக்ரான் போல, புதுப்புது வேரியன்ட்கள் வரும்போது, தொற்றிற்கு எதிராக செயலாற்றும் திறன் குறையலாம். இருப்பினும், தடுப்பூசிகள் உயிரிழப்பைத் தடுக்கவல்லவையே.

  • அதனால்தான், இந்த மூன்றாவது அலையில் நிறைய தொற்றுகள் ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன. மேலும், டெல்டாவை விட ஓமிக்ரான் ஓரளவு குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதும் மற்றொரு காரணம்.

✍️ கூடுதல் தகவல்: மேக்ஸ் ஹெல்த்கேர் குழுமமும், இந்தியா முழுக்க இருக்கும் தன்னுடைய 17 மருத்துவமனைகளில் நடத்திய ஓர் ஆய்வு முடிவை அண்மையில் பகிர்ந்துள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனைகளில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களில் 60% பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்.

Note: இதுபோன்ற மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை எளிமையான வடிவில் தினமும் படிக்க, The Subject Line நியூஸ்லெட்டருக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். கீழே இருக்கும் பாக்ஸில் உங்கள் மின்னஞ்சலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!