கொரோனா வைரஸின் ஒவ்வொரு புதிய உருமாற்றம் வரும்போதும், அது எப்படிப் பரவும், எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழத் தவறுவதில்லை. அந்த வகையில் ஒமிக்ரானின் புதிய திரிபான பிஏ 4 வகை திரிபு உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. நியூஸிலாந்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டிருக்கும் இந்தத் திரிபு, அடுத்தடுத்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. பிஏ 4 வகை திரிபானது ஆபத்தானதாக இருக்குமா, வேகமாகப் பரவுமா என்றெல்லாம் மக்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த விளக்கமான தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

"கொரோனா வைரஸானது தொடர்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக்கும். பொதுசுகாதார நடவடிக்கைகளும் நோய்த்தொற்றைத் தடுக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்புகளும் 100 சதகிவிதம் சாத்தியமாகும்வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தான் இருக்கும் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதுதான் வைரஸின் இயல்பு.
கொரோனா வைரஸில் ஆல்பா, டெல்டாவை தொடர்ந்து ஒமிக்ரான் வந்தது. அது வேகமாகப் பரவி, வேகமாகவே குறைந்தது. ஒமிக்ரானிலும் இப்போது புதிய திரிபுகள் வருகின்றன. பிஏ1, 2, 3- இவற்றைத் தொடர்ந்து இப்போது 4 மற்றும் 5 - ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவை முதலில் தென்னாப்பிரிக்காவிலும் போஜ்வானாவிலும்தான் கண்டறியப்பட்டதாக ஏப்ரல் 12-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல நாடுகளும் இந்த பிஏ 4- 5 வகை திரிபுகளைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் நியூஸிலாந்தில் ஒருவரிடம் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தீவிர கட்டுப்பாடுகளைப் பல நாள்கள் பின்பற்றியவை. சமீபத்தில்தான் கட்டுப்பாடுகளைத் தளர்த்தின. பயணியின் மூலம் இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

எனவே வைரஸ் உருமாறும்போது குறிப்பிட்ட சில திரிபுகளை மட்டும் உலக சுகாதார நிறுவனம் கூடுதல் எச்சரிக்கையுடன் கண்காணிக்கிறது. அந்த வகையில் இப்போது பிஏ4 மற்றும் 5 ஆகியவற்றையும் கண்காணிக்கிறார்கள்.
புதிய உருமாற்றங்கள் வரும்போது தடுப்பூசிகள் எந்தளவுக்குப் பாதுகாப்பு தரும் என்பதை முதலில் பார்க்க வேண்டும். அடுத்து அந்தத் திரிபு எவ்வளவு எளிதில் பரவக்கூடியது, அப்படியே பரவினால் அதன் தீவிரம் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்போதைக்கு இந்தத் திரிபுகள் தீவிர நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாடுகளில், பல இடங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து இது எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய அலைகள் உருவாக இந்த உருமாற்றங்கள் காரணமாகலாம்.
பிஏ1 எனப்படும் ஒரிஜினல் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்குக்கூட இந்த உருமாற்றம் மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிகிறது. குழு எதிர்ப்பு சக்தியெல்லாம் உதவாது என்பதும் புரிகிறது. ஒமிக்ரான் தொற்றுக்குள்ளானவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முழுமையாகச் செலுத்திக் கொள்ளாதவர்கள், அதிலும் இணைநோய்கள் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு, மூன்றாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்தத் தொற்று மீண்டும் வரலாம்.

எனவே அடுத்த அலை குறித்த அச்சம் தவிர்த்து, எப்போதும்போல கவனமாக இருப்பதைப் பின்பற்றுவோம். முகக்கவசங்களைத் தவிர்க்க வேண்டாம். அதிக கூட்டமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். கை சுகாதாரம் பேணுவது, சுற்றுப்புறத்தை காற்றோட்டத்துடன் வைத்திருப்பது, தடுப்பூசிகளின் தவணைகளை தவறாமல் போட்டுக்கொள்வது போன்ற விஷயங்கள் மட்டும்தான் நம்மைக் காப்பாற்றும்.''