Published:Updated:

Covid Questions: கொலஸ்ட்ரால் மாத்திரை எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

Ecosprin, AV 75 மற்றும் கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? இவை பிளட் தின்னர் வகை மருந்துகளா?

- ரமேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``Ecosprin என்பது பிளட் தின்னர் மற்றும் ஆன்டி பிளேட்லெட் மருந்து. AV என்பது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஸ்டாட்டின் வகை மருந்து. இரண்டுமே இதயக் கோளாறுகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுபவை. கோவிட் தொற்றானது பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான அபாயங்களை அதிகரிக்கக்கூடியது.

Covid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா?

தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே அந்த ஆபத்துகளிலிருந்து காக்கும் ஒரே ஆயுதம். எனவே, இந்த நோயாளிகள் தவிர்க்காமல், தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்."

என் வயது 35 , கடந்த வாரம் எனக்கு கடைவாய்ப் பல் (விஸ்டம் டீத்) எடுக்கப்பட்டது. நான் ஏற்கெனவே கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டேன். ஏழு நாள்களுக்கு முன் வலி நிவாரண மாத்திரை எடுத்துக்கொண்டேன். பல் அகற்றிய நிலையில் நான் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

- சரண்யா (விகடன் இணையத்திலிருந்து)

பல் மருத்துவர் மரியம் சஃபி
பல் மருத்துவர் மரியம் சஃபி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.

``நீங்கள் கடைவாய்ப் பல்லை அகற்றிக்கொண்டதற்கோ, வலி நிவாரணி எடுத்துக்கொண்டதற்கோ, கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் நீங்கள் தடுப்பூசியின் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்வதால் எந்தப் பிரச்னையும் வராது. தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு