Published:Updated:

Covid Questions: ஆர்த்ரைட்டிஸுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

Rheumatoid Arthritis (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya from Pexels )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: ஆர்த்ரைட்டிஸுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Rheumatoid Arthritis (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya from Pexels )

என் மனைவிக்கு 40 வயது. 2 வருடங்களாக அவருக்கு ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை இருக்கிறது. தினமும் மாத்திரைகள் சாப்பிடுகிறார். இன்னும் கோவிட் தடுப்பூசி போடவில்லை. சென்னையில் அரசு மருத்துவமனை ஒன்றில் கேட்டபோது, ஆர்த்ரைட்டிஸுக்கான மாத்திரைகளை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு ஒரு வாரத்துக்கும், போட்டுக்கொண்ட பிறகு ஒரு வாரத்துக்கும் நிறுத்த வேண்டும் என்கிறார்கள். என் மனைவியால் மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க முடியாது. என்ன செய்வது?

- பழனி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி
மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என்பது இணைநோய்களில் ஒன்று. இந்த பாதிப்புள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அதன் தீவிரம் சற்று அதிகமாக இருக்கும் என நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. எனவே இந்த பாதிப்பு உள்ளவர்கள் அவசியம் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மனைவி இரண்டு வருடங்களாக மருந்து, மாத்திரைகள் எடுத்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என்பது ஒருவகையான `ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்'.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது உடலில் உள்ள தற்காப்பு அமைப்பு, தன்னுள் உள்ள ஒரு பொருளை தனக்கு எதிரி எனத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவதால் ஏற்படும் பாதிப்பு இது. இந்தப் பிரச்னைக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைப்பவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸுக்கு கொடுக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதால், கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதாகச் சொல்லப்படுகிறது. மீதமுள்ள 90 சதவிகிதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் சராசரியான நோய் எதிர்ப்பாற்றலே உருவாவதும் தெரிய வந்திருக்கிறது.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

உங்கள் மனைவி இத்தனை நாள்களாக எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளை ஒன்றிரண்டு வாரங்கள் நிறுத்துவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே நீங்கள் மீண்டுமொரு முறை உங்கள் மருத்துவரிடம் பேசி, வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொண்டே, தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம். அதே நேரம் ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு mRNA வகை தடுப்பூசிகளில் மூன்றாவது டோஸ் தேவைப்படலாம் என்று சில தரவுகள் சொல்கின்றன. ஆனால் நம் நாட்டில் அடினோவைரஸ் தடுப்பூசிகள்தான் போடப்படுகிறது என்பதால் இந்தத் தரவுகள் குறித்த தகவல்கள் எதுவும் நமக்குச் சொல்லப்படவில்லை. எனவே உங்கள் மனைவிக்கு மருந்துகளை நிறுத்தாமல், தடுப்பூசியையும் செலுத்துவதுதான் பாதுகாப்பானது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism