Published:Updated:

Doctor Vikatan: மார்பக கட்டியால் உருவான பயம் மற்றும் மன அழுத்தம்; என்ன செய்வது?

Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: மார்பக கட்டியால் உருவான பயம் மற்றும் மன அழுத்தம்; என்ன செய்வது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

என்னுடைய இரண்டு சினைப்பைகளிலும் கட்டிகள் இருந்தன. மூன்று மாதங்களுக்கு முன்பு வலதுபக்க சினைப்பையை அகற்றிவிட்டார்கள். கடந்த 17 வருடங்களாக இரண்டு மார்பகங்களிலும் ஃபைபர்அடினோமா பிரச்னையும் இருக்கிறது. அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்தும், இன்னும் அப்படியே இருப்பதாக ரிப்போர்ட் சொல்கிறது. ஹார்மோன் பிரச்னையே காரணம் என்கிறார்கள். என் கணவர் வெளிநாட்டிலும் நான் இந்தியாவிலும் இருக்கிறோம். என் உடல்நல பாதிப்பு எனக்குள் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குத் தீர்வு உண்டா?

-நபீலா பேகம் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் கார்த்திகா
டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.

``சினைப்பையில் இருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டிகள் எந்த மாதிரியானவை என்ற விவரமில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது அவை புற்றுநோயல்லாத கட்டிகள் என்றே தெரிகிறது. மார்பகங்களில் ஏற்படும் ஃபைப்ரோஅடினோமா, கட்டிகள், மாற்றங்கள் என எல்லாமே இனப்பெருக்க வயதில் தொடங்கி, பீரியட்ஸ் நிற்கும் மெனோபாஸ் காலகட்டம்வரை இருப்பது இயல்புதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை நினைத்து நீங்கள் மன அழுத்தம் கொள்ளத் தேவையே இல்லை. உங்களுக்குச் சொல்லப்பட்டதுபோல ஹார்மோன் மாற்றங்களின் விளைவாகவும் இப்படி இருக்கலாம், அதனால் மன அழுத்தமும் அதிகரிக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு இருக்கும் பிரச்னையை அப்படியே விடலாமா, மருந்து, மாத்திரைகள் தேவையா என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

இதே பிரச்னையை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு மட்டுமே இருப்பதாகவோ, இது தீவிரமான பிரச்னை என்றோ நினைத்துக் கவலைப்படாதீர்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?